RSS

Tag Archives: முயற்சி

ஆளுமை சக்தி அடைய மனிதன் படும் பாடு !

ஆளுமை உள்ளத்தின் வெளிப்பாடாகும் . அது உற்சாகத்தின் ஆணி வேர்.  சிந்தனையின் பிறப்பிடம் .உழைப்பினை உந்தும்  சக்தி.அறிவின் அடித்தளம்.  இத்தனையும்  சேர  முயற்சி என்ற உந்தும் சக்தி  தேவை.

ஆல மரத்தின் விதை சிறுது ஆனால் அது உண்டாக்கும் மரம் பெரிது. உடலின் உருவத்திற்கும் அவன் பெற்றிருக்கும் ஆற்றலுக்கும் சம்பந்தம் இல்லை .மெலிந்த மேனியும், அழகற்ற  தோற்றம் கொண்ட எத்தனையோ பேர் சிறப்பான  ஆளுமை பெற்றவர்களாகத் திகழ்வதனையும்  நாம் பார்க்கின்றோம் .ஆள் பாதி ஆடை  பாதி என்று எண்ணி  தன்னிடம் உள்ள ஆளுமையினை குறைத்து விடக்கூடாது.
நிச்சயமாக உங்களுக்குள் ஒரு ஆற்றல் மறைந்துள்ளது  என்று நம்பி அதனை வெளிக்கொணர  செயல்படுங்கள் .உங்களைவிட தாழ்ந்தவர் உங்களை ஆட்சி செய்வதனை பாருங்கள். அந்த ஆற்றலுடம் ஆளுமை சக்தி பெற்று ஆட்சிக்கு  வந்த பின் நம்மை அவர்கள்   ஆட்டி படைக்கும் வேதனையும் நாம் அனுபவிக்கவில்லையா ! அந்த ஆட்சி தொடர அவர்கள் ஈடுபடும் தவறான முறைகளில் மாட்டி அவதிப்படுவோர் பலர் . Read the rest of this entry »

 

Tags: , ,

இனியவை நாற்பது

1. ஆழ்மனத் துள்ளேயே ஆழமாய் எண்ணமதை
பாழின்றி வைத்துப் பழகு.         .

2. அடுத்தவ ரெண்ண மழகெனப் பட்டு
கடுத்தலின்றி பேசுதல் நன்று.

3.உதவிட்ட நல்லவ ருள்ள மகிழ
உதவிகள் செய்து விடல்.

4. எறும்பினைப் போலவே என்றுமுன் வாழ்வில்
சுறுசுறுப்பை காணல் சிறப்பு.

5. உற்சாக மென்னு முயிரணுக்க ளுள்ளத்தில்
நிற்காம லோடட்டும் நாள்.

6. மகிழ்ச்சியைக் காட்டி மகிழ்ச்சியை யூட்டி
மகிழ்ச்சியைக் கண்ணாலேக்  காண்.

7. நல்ல எதிர்பார்ப்பு   நம்மில் வளர்ப்பதுவே
வல்லவனாய் மாற்றும் வழி.

8. நம்பிக்கை ஒன்றே நமக்குள்ள மூன்றாம்கை;
நம்பி யிறங்கு களம்.

9. வேட்கை யுணர்வுகள் வேகமாய்ப் பீறிடும்
யாக்கைதான் வேண்டுமே ஈண்டு.

10. வாய்மட் டுமன்று வசீகரக் கண்களும்
நோய்விட் டகலச் சிரிப்பு.

11. உள்ளத் தினுள்ளே உருவானப் புன்னகை
கள்ளமின்றி காட்டு மிதழ்.

12. உன்னையே உள்நோக்கி உன்னையே நீகண்டால்
உன்னையே மாற்றும் மனம்.

13. உன்வாழ்வு உன்றன் உளப்பூர்வ எண்ணமெனில்
உன்வாழ்வே நீயே உணர்.

14. அடாதிழப்பு வந்தாலும் அங்கேயே நிற்காமல்
விடாதுழைப்பு செய்து விடல்.

15. எவரின் உதவியும் எப்போதும் வேண்டும்
எவருடனும் நட்புடனே பேசு.

16.  மற்றவரின் ஆசை கவனம் மகிழ்ச்சி

பற்றியேப் பற்றுடன் கேள்

17.   குற்றங்களை ஏற்கும் குணம்தான் பிறரிடம்

பற்று வளர்த்திடும் பண்பு

18.  சரளமாய்ப் பேசிடும் சங்கீதம் போல
கரவோசை காணும் இசை.

19. மனச்சுமை போக்க மனம்விட்டு பேச
தினம்சுரக்கும் புத்துணர்வு பார்.

20. உரையா டலில்கண்ணை உற்றுநீ பார்த்தால்
திரையில்லா அன்பே தெரிவு
.
21.  எண்ணித் துணிந்தால் எவரும் வியந்திடும்
வண்ணம் செயலும் நிகழ்வு.

22. சிரித்த முகமே சிறந்த முகமாம்
விரிந்த மலரின் மணம்.

23. ஆபத்தை நோக்கி ஆர்வமாய்ப் போற்று
கோபத்தை விலக்கி விடல்.

24. தீர்வுகள் காணத் தெரியும் புதியவைகள்

ஆர்வமுடன் செய்யப் பழகு.

25. மனமும் செயலும் மொழியும் கலந்த

தினப்பயிற்சி என்றும் சிறப்பு.

26. ”உன்னால் முடியும்” உளமதில் சொல்லிவை
பின்னால் தெரியும் விளைவு.

27. உன்னை விடவும் உலகில் நலிந்தவரை
தன்னுயிராய்க் காத்தல் நலம்.

28.  எல்லா உலகும் இயக்கும் இறையிடம்
எல்லாமும் விட்டு விடு.

29. வெற்றி கனியினை வெல்லும் வரையிலே
பற்றிய பாதையில் செல்.

30. எல்லா செயல்களும் ஏற்கப் படவேண்டி
நல்லெண்ண உள்ளமே கொள்.
31. இறந்தகாலம் விட்டு இனிவரும் காலம்
ம்றந்து நினைக்கவே இன்று.

32.  இன்பமும் துன்பமும் இங்கொன் றெனயெண்ணி
அன்பினைப் பற்றியே வாழ்.

33. கட்டுப்பாடு கண்ணியம் கட்டுடல் காட்டுமே
விட்டு விடாது ஒழுகு.

34. தேடலொன்றே வாழ்வினைத் தேடிடும் காரணம்
ஓடவோடத் தேடி உழை.

35. வாழ்க்கைப் புயலை வரவேற்று கொண்டால்
வாழ்க்கைப் பழகிடும் பார்.

36. சிடுசிடுப்பு கோபம் சிதைத்திடும் உன்னை

அடுத்தடுத் தென்றும் அழிவு

37. ஆசை வளர்த்திடு ஆங்கே முயற்சியின்
ஓசை விளையும் உளம்.

38. நன்றி மறவாமை நன்றெனக் கொண்டாலே
என்றும் வருமாம் உதவி.

39. பாரமாய் வாழ்வை பயத்துடன் பார்த்தால்
தூரமாய் நிற்கு முலகு.

40. எண்ண மெதுவோ இயக்கமு மதுவேயாம்
திண்ணம் உளவியல் சொல்.

”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்

Source: http://kalaamkathir.blogspot.com/2010/12/blog-post_19.html

 
1 Comment

Posted by on December 20, 2010 in Uncategorized

 

Tags: , , ,

இருள்நீக்கும் இந்தியச்சுடர்!


இருளை கண்டு நீங்கள் பயப்படலாம். இருளின் தன்மையும் இதுதான். இதிலிருந்து தப்பிக்க விடியும் வரை காத்திருப்பதுதான் ஒரே வழி. இவ்விதி இரவின் இருளுக்குப் பொருந்தும்.

வாழ்க்கை இருளுக்கு?

இருளின் இன்னொரு பெயர் குறைந்த வெளிச்சம் என்று சொல்லுவதெல்லாம் கவிதைக்கு வேண்டுமானால் அழகாக இருக்கலாம். விடியுமென்று காத்திருந்து மண்ணோடு மண்ணாகிப் போனவர்கள் பல்லாயிரம் பேர். என்றாவது ஒருநாள் என் வாழ்க்கை அதுவாகவே விடியும் என்று காத்திருப்பது மூடநம்பிக்கை. முனைப்பான முயற்சிகள் மட்டுமே உங்கள் விடியலை விரைவாக்கும்.

அதுவரை வெளிச்சத்துக்கு ஒரு மெழுகுவர்த்தியாவது துணைக்கு வேண்டும் அல்லவா? பல ஆயிரம் பேருக்கு விடியும் வரை மெழுகுவர்த்தி வெளிச்சம் தந்து காத்து வரும் பணியைதான் செய்துவருகிறது இந்தியச் சுடர்.

சுடர் முதலில் எங்கே தோன்றியது?

உதயகுமார் என்ற இளைஞரும், அவருடைய நண்பர்களும் அப்போது சென்னை பச்சையப்பா கல்லூரி மாணவர்கள். கிராமங்களில் இருந்து நகருக்கு படிப்பு நிமித்தமாக வந்தவர்கள். பெரும்பாலானவர்கள் அவரவர் குடும்பத்தில் முதல் தலைமுறையாக பட்டம் படிப்பவர்கள்.

இந்த கல்விக்காக தாங்கள் அடைந்த சிரமங்களை அவ்வப்போது பேசிக்கொள்வார்கள். போதுமான அறிவும், திறனும் இருந்தும் கூட பட்டப்படிப்பு படிக்க வாய்ப்பில்லாமல், பணிபுரிய சென்ற தங்களுடைய சகபள்ளித் தோழர்களை நினைவு கூர்ந்து கொள்வார்கள்.

“சரி. எப்படியோ அடித்துப் பிடித்து நமக்கு இந்த வாய்ப்பு கிடைத்துவிட்டது. நம்முடைய அடுத்த தலைமுறைக்கு?” அக்கறையோடு அவர்களுக்குள் எழுந்த இந்த கேள்விக்கு விடை தேடிக்கொண்டிருந்தார்கள்.

கல்லூரி முடிந்ததும், திசைக்கொரு பறவைகளாய் பறந்தார்கள். தகவல் தொழில்நுட்பத்துறை விஸ்வரூபம் எடுத்து நின்ற காலம் அது. பெரும்பாலானவர்களுக்கு அதே துறையில் நல்ல சம்பளத்தோடு வேலை கிடைத்தது. தொலைபேசியிலும், நேரிலும் அவ்வப்போது சந்தித்து விவாதிக்கும்போது தங்களுடைய முந்தைய கேள்விக்கு இப்போது அவர்களிடம் பதில் இருந்தது. ஏனெனில் இப்போது இவர்கள் பொருளாதாரத் தன்னிறைவு பெற்றிருந்தார்கள். தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை இயலாதவர்களுக்கு தந்து உதவும் மனமும் அவர்களிடம் இருந்தது.

இப்படித்தான் 2004ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ‘இந்தியச் சுடர்’ நிறுவனம் பிறந்தது. கிராமங்களில் இருந்து வந்தவர்கள் மீண்டும் கிராமங்களுக்கே சென்று, தாங்கள் அடைந்த முன்னேற்றத்தை, தங்களுக்குப் பிறகு வருபவர்களும் பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு ஏற்றிய சுடர் இது. உயர்ந்த நோக்கங்கள் தங்களை தாங்களே நிறைவேற்றிக் கொள்ளும் திறன் படைத்தவை.

தொடங்கப்படும்போது இந்தியச்சுடர் தமக்குள்ளாக எடுத்துக்கொண்ட உறுதிமொழிகள் இவை :

- வலிமையான இந்தியாவை உருவாக்க கல்வியை பரவலாக்குவது.

- ஆதரவற்ற மற்றும் ஏழை குழந்தைகளுக்கு எட்டாக்கனியாக இருக்கும் கல்வியை அவர்கள் எட்டுமாறு வகை செய்து தருவது.

- குழந்தைகளின் திறனை சமூக-கலாச்சார மேம்பாட்டு நிகழ்வுகளின் மூலமாக அதிகரிப்பது.

- சுய ஒழுக்கம் மிகுந்த சமுதாயத்தை உருவாக்கும் பணியை குழந்தைகளிடமிருந்தே துவங்குவது.

இந்த உறுதிமொழிகளை அரசுசாராத ஒரு அமைப்பு எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமென்ன, அதுவும் குறிப்பாக கல்வி குறித்த அக்கறையோடு? இங்குதான் இன்றைய கள யதார்த்தம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியிருக்கிறது. சுதந்திரம் பெற்று அறுபத்து மூன்று வருடங்களாக தன்னாட்சி செய்துவந்தும் இந்தியாவின் நிலை கீழ்க்கண்டவாறுதான் இருக்கிறது.

- 65.4% மக்களுக்கு மட்டுமே எழுதப் படிக்கத் தெரியும். சுமார் முப்பத்தைந்து கோடி பேருக்கு எழுத்து, படிப்பு வாசனையே இல்லை.

- ஏழ்மை காரணமாக ஆயிரம் குழந்தைகளில் எண்பத்தி இரண்டு குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பப்பட வேண்டிய வயதில் பணிக்கு அனுப்பப் படுகிறார்கள்.

- 2,390 லட்சம் பேருக்கு வெறும் ஐந்து லட்சம் பள்ளிகளே இருக்கின்றன.

- பதினான்கு சதவிகிதம் பள்ளிகளுக்கு முறையான கட்டிடம் இல்லை.

- முப்பத்தியெட்டு சதவிகிதம் பள்ளிகளுக்கு கரும்பலகை கூட இல்லை.

- முப்பது சதவிகிதம் பள்ளிகள் ஒரே ஒரு ஆசிரியரோடு இயங்கி வருகின்றன.

- ஐம்பத்தியெட்டு சதவிகிதம் பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லை.

- பள்ளிக்கு வரும் குழந்தைகளில் எழுபது சதவிகிதம் பேர் பதினான்கு-பதினைந்து வயதுகளில் பள்ளிக்கு செல்வதை நிறுத்தி விடுகிறார்கள். Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on March 15, 2010 in 1

 

Tags: , , , , , ,

 
Follow

Get every new post delivered to your Inbox.