போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான் என்று அறிக்கை விட்டவர் ஜெயலலிதா என்று கூறியுள்ள திமுக தலைவர் கருணாநிதி, இலங்கை பிரச்சினையில் தி.மு.க. மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்று பட்டியல் இட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கை மீது பொருளாதார தடை கோரி தமிழக சட்டப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தி.மு.கழகத்தின் சார்பில் அந்தத் தீர்மானத்தை வரவேற்றும், சட்டப் பேரவையிலே உள்ள எல்லா கட்சிகளும் ஒன்றுபட்டு தீர்மானத்தை ஆதரித்திட வேண்டுமென்றும் தி.மு.கழக சட்டமன்ற கட்சியின் துணைத் தலைவர் தம்பி துரைமுருகன் அவையில் பேசியிருக்கிறார்.
தி.மு.கழகம் பொறுப்பிலே இருந்தபோது இலங்கைத் தமிழர்களுக்காக அனைத்துக் கட்சிக் கூட்டம், சட்டப் பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம், தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம், மனிதச் சங்கிலி போராட்டம், பிரதமருக்கு தந்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா என்ற அறிவிப்பு, ராஜினாமா கடிதங்களை தானே பெற்றுக் கொண்டது, இறுதி எச்சரிக்கை என்ற அறிவிப்பு என்றெல்லாம் நடத்தியதாகவும், ஆனால் அவைகள் எல்லாம் என்னால் நடத்தப்பட்ட நாடகங்கள் என்றும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேரவையிலே முழங்கியிருக்கிறார். Read the rest of this entry »






