RSS

Category Archives: video

”வாழணும்னு ஆசையா இருக்கு” கடைசிக் குரல்!

644090_10151724817974202_137835733_nதிரைப்படத்தில் காட்டுகிறார்கள் ஒரு பெண்ணை நண்பர்களாக சென்றவர்கள் பாலாத்கரமாக கெடுத்து உயிர் போகிறது . படங்களில் தொலைக்காட்சிகளில் திராவகம் வீசுவதை காட்டுகிறார்கள் . இது மனித மனதை நன்மையை விட கெடுதல் அதிகமாக விளைவிக்கின்றது .தமிழ் சினிமா இவ்வாரான கொடூரங்களை ஊக்குவிக்கின்றன. அது தொடர்ச்சியாகச் செய்துகொண்டே இருக்கிறது.

ஒன்றிரண்டு நல்ல திரைப்படங்களைத் தவிர காதல், தாலி சென்டிமென்ட், அரிவாள், தீவிரவாதம் இதைத் தாண்டி தமிழ் சினிமா எதைத்தான் அறிவுபூர்வமாகவும் யதார்த்தமாகவும் சொல்லியிருக்கிறது ? இவ்வாறான திரைப்படங்களில் ஊறி வளர்ந்த ஒரு இளைஞனிடம் இதைப் போன்ற வன்முறையைத் தவிர வேறெதனை எதிர்பார்க்க முடியும்?

  • பயங்கரமான குற்றம் இழைத்தவனுக்கும் அவனது நோக்கம் (motive or intention )அவனுக்கு உயிரைப் போக்க வேண்டுமென்ற எண்ணமில்லை பாதிப்பு ஏற்பட வேண்டுமென்ற எண்ணம்தான் என்றும் வாதாடலாம் ) பாதுகாப்பும் கொடுத்து சிறைத் தண்டனையும் கொடுக்கப்பட்டு அவனை பாதுகாப்பு கொடுத்து விடுகின்றது. விவாதம் என்ற போர்வையும் அவனுக்கு பாதுகாப்பு கொடுத்து விடுகின்றது. சிலர் ஆண் ஆதிக்கமென்று பேசி திசையை மாற்றுகிறார்கள். மரண தண்டனை கொடுத்ததால் மட்டும் திருந்தி விட்டார்களா இவ்விதம் பேசி தீர்வின் முடிவை ஆராய்கின்றார்கள்.

    கைக்கு கை, கண்ணுக்கு கண், உயிருக்கு உயிர் கொடுமையானதாக தென்பட்டது.
    பாதிக்கப் பட்ட பெண்ணே சொல்கிறாள் என்னைப்போல் அவனும் கஷ்டப்பட வேண்டுமென்று.
    ”வாழணும்னு ஆசையா இருக்கு” – ஆசிட் தாக்குதலுக்கு உள்ளான விநோதினியின் கடைசிக் குரல்!

    அவனுக்கு உயிரைப் போக்க வேண்டுமென்ற எண்ணமில்லை பாதிப்பு ஏற்பட வேண்டுமென்ற எண்ணம்தான் என்றும் வாதாடலாம்
    தீர்ப்பு வரவும் கால தாமதமாகின்றது

    “ஆஸிட் வீச்சின் வலியையும் வேதனையும் அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும் அவள் ஏன் அப்படிச் சொல்கிறாள் என்று. அவன் மேலும் ஆஸிட் வீச வேண்டும் என்று அவள் கூறியிருப்பது துன்பத்தின் உச்ச கட்டத்தில். அவனை மன்னிக்க அவள் ஏசு கிறிஸ்து அல்ல. ஒரு சாதாரண மானிடப் பெண். எந்த ஒரு குற்றமும் செய்யாத, பெற்றோருக்கு நல்ல வாழ்வைத் தர நினைத்த பெண். அவள் கூறியதை வைத்து பட்டி மன்றம் நடத்த வேண்டிய தேவை இல்லை என்றே நினைக்கிறேன்.
    ஜோதி, ரிஸானாவைத் தொடர்ந்து இந்த வருடத்தின் ஆரம்ப காலங்களை திரும்பவும் துயரச் சலனங்களுக்குத் தள்ளி விட்டிருக்கும் இன்னுமொரு பெண் வினோதினி” .Lakshmi Chitoor Subramaniam

     
  • Tags: , , ,

    பாரிசுக்கு ஒரு பரவச பயணம் (படங்கள் மற்றும் காணொளிகள்)

    பாரிசுக்கு ஒரு பரவச பயணம் (படங்கள் மற்றும் காணொளிகள்)
    vlcsnap-2011-05-25-20h41m38s148

    vlcsnap-2011-05-25-20h43m11s104

    vlcsnap-2011-05-25-20h51m50s156

  • vlcsnap-2011-05-25-20h52m46s150

    vlcsnap-2011-05-25-20h53m04s90

    vlcsnap-2011-05-25-20h54m10s24

    vlcsnap-2011-05-25-20h54m49s174

    vlcsnap-2011-05-25-20h55m23s215

    vlcsnap-2011-05-25-20h56m27s130

    vlcsnap-2011-05-25-20h57m14s103

    vlcsnap-2011-05-25-20h57m56s232

    vlcsnap-2011-05-25-20h58m49s8

    vlcsnap-2011-05-25-21h00m38s49

    vlcsnap-2011-05-25-21h03m48s116

    vlcsnap-2011-05-25-21h05m56s48

    vlcsnap-2011-05-25-21h10m14s212

    vlcsnap-2011-05-25-21h13m28s82

    vlcsnap-2011-05-25-21h15m34s59

    vlcsnap-2011-05-25-21h16m20s32

    vlcsnap-2011-05-25-21h17m53s151

    vlcsnap-2011-05-25-21h18m39s166
    Pretty Paris – 1
    Pretty Paris – 2.
    Pretty Paris – 3
    Pretty Paris – 4
    Pretty Paris – 5
    Pretty Paris – 6.
    Pretty Paris 7
    Pretty Paris – 8
    Pretty Paris -9
    Pretty Paris -10

     
  • Tags: ,

    எழுது ஒரு கடுதாசி

    malliகிராமங்களில்தான் ஒரு நாட்டின் கலாச்சார உயர்வுகள் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றன. கிராமங்களில் வளர்ந்தவர்கள், பெருநகரத் தெருக்களில், கிராமிய மணங்கமழ தம் பழக்க வழக்கங்களையும் வாழ்க்கை நெறிகளையும் நினைவுகூர்ந்து உரையாடும்போதும், அவை தொடர்பான எண்ணங்களை பரிமாறிக்கொள்ளும்போதும், பெருநகரத்துச் செயற்கை நாடகங்களால் உள்ளே செத்துக்கிடக்கும் அத்தனை உணர்வுகளும் உயிர்பெற்று மீண்டும் புலர்ந்துவிடுவது இன்றும் நம்மை நம் அடிப்படைப் பண்பு மாறாமல் பாதுகாத்துவருகின்ற வரம்.

    இங்கே ஒரு கிராமத்து மகன், புகைப்படத்தையும் உறவினர்களின் பரிந்துரைகளையும் மட்டுமே முழுமனதுடன் ஏற்று, ஒரு வண்ண நிலவை வாழ்க்கைத்துணையாக்க நிச்சயம் செய்கிறான். உரையாடுவதோ கடிதம் வரைவதோ ஏற்றுக்கொள்ளப்படாத அந்த கிராமத்தில், பெருநகர வாழ்க்கையின் தூண்டுதலால், அவளிடம் கடித சுகம் கேட்டு அவன் எழுதும் கடிதமே இந்தக் கவிதை.

    அவர்களின் நாட்டுப்புற நடையிலேயே நடக்கிறது.

  • நேத்துவர எம்மனச
    நெலப்படுத்தி நானிருந்தேன்
    பாத்துவச்ச தாய்தம்பி
    பருசமுன்னு சொன்னாங்க

    வேத்துவழி தெரியாம
    விழுந்தேன் நான் வலைக்குள்ள
    ஊத்தாட்டம் எம்மனசு
    ஒன்னெனப்பா பொங்குதிப்போ

    பாழான எம்மனசு
    பனியே ஒன் வசமாயி
    நாளாவ நாளாவ
    நீ நடக்கும் நெலமாச்சி

    மாளாத கனவாச்சி
    மங்காத நெனப்பாச்சி
    தாளாத தனிமையில
    தீராத ஆசையில

    வாடாத மருக்கொழுந்தே
    வத்தாத தேனூத்தே
    போடேண்டி கடுதாசி
    பொல்லாத மனசமாத்தி

    போடாட்டி எம்மனசு
    புண்ணாகிப் போகூன்னு
    மூடாத முழுநிலவே
    மச்சினனத் தூதுவிட்டேன்

    ஆடாத மனசோட
    அசையாத மொகத்தோட
    போடாம கடுதாசி
    புதிராக இருந்துட்டே

    வாடாத எம்மனசும்
    வாடிப்போய்க் கெடக்குதடி
    கூடாத காரியமா
    குத்தமுன்னு யாருசொன்னா

    தாத்தா சொன்னாரா
    தாய்மாமஞ் சொன்னாரா
    பூத்த புதுப் பூவாட்டம்
    போட்டாவக் கொடுத்தாங்க

    கூத்தாத் தெரியலியா
    கூடாது கடிதமுன்னா
    வேத்தாளு ஆனேனா
    வீணாயேன் மறுத்தாங்க

    யாருவந்து கேட்டாங்க
    ஏம்பரிசம் போட்டாங்க
    ஊரயெல்லாங் கூட்டிவச்சி
    ஒன்னெனப்பக் கொடுத்தாங்க

    நீரயள்ளி எறைச்சாக்கா
    நெலம் ஈரம் ஆவாதா
    தூரநாடு வந்ததால
    தொலையுதுன்னு போவாதா

    தேர இழுத்தும் இப்போ
    தெருவசந்தங் காணலியே
    பூவப் பரிச்சும் இப்போ
    புதுவாசம் வீசலியே

    நாளமெல்லப் போக்காத
    நரகத்துல தள்ளாத
    யாருநின்னு தடுத்தாலும்
    எழுதமட்டும் தயங்காத

    நாந்தான ஒங்கழுத்தில்
    நல்லமல்லி மாலையிடுவேன்..
    வாந்தாலும் எங்கூட
    வாடினாலும் எங்கூட

    நாந்தானே ஒனக்கூன்ன
    நாடறிஞ்ச சேதிய நீ
    ஏந்தாமத் தூங்காத
    எழுது ஒரு கடுதாசி

    Source :
    http://anbudanbuhari.blogspot.in/2008/01/blog-post_5123.html

    கல்யாணமாம் கல்யாணம்.-புகாரி
    வாழ்த்துகள் கவிஞர் புகாரிக்கு

     
  • Tags: , , ,

    லைஃப் ஆஃப் பை படம் ஆஸ்கர் பரிந்துரை – “நன்றியுணர்வும் மகிழ்ச்சியும் பொங்குகிறது” ஜெயஸ்ரீ

    427479_281242005334663_1730601143_n“Life of Pi” (3-D) படம் பார்த்தேன். மிகவும் பிரமாண்டம். என்னை மிகவும் பாதித்தது. படத்தின் ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் யாவும் தமிழ்நாட்டில்தான். அதில் ஒரு பள்ளிவாயிலில் தொழுகை நடைபெறுவதைக் காட்டுகிறார்கள். “குத்பா பள்ளி” என்று தமிழில் பெயர்ப்பலகையில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்திலுள்ள பள்ளி என்று நினக்கிறேன். வெள்ளைத் துப்பட்டி அணிந்த பெண்களின் நடமாட்டம் வீதியில் இருக்கிறது.
    369445_100000281373744_420311625_q
    Abdul Qaiyum s
    ——————————————–
    ஆஸ்கர் பரிந்துரை: “நன்றியுணர்வும் மகிழ்ச்சியும் பொங்குகிறது”

    இந்தியர்களின் கனவாக இருந்த ஆஸ்கர் விருதை நனவாக்கியவர் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். தற்போது ஆங்கிலத் திரைப்படத்தில், தமிழில் தாலாட்டுப் பாடலை எழுதி, பாடிய பின்னணிப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ‌, ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். லைப் ஆப் பை என்ற படத்தில், அந்த பாடலை பாம்பே ஜெயஸ்ரீ எழுதி இசையமைத்து பாடியுள்ளார். இந்த பாடலை எழுதியதற்காக அவர் பெயர் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
    ——————————————

  • லைஃப் ஆஃப் பை படத்தில் தான் எழுதிப் பாடிய தமிழ்த் தாலாட்டுப் பாடல் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது தொடர்பில் பாம்பே ஜெயஸ்ரீ தமிழோசைக்கு வழங்கிய பேட்டி.
    கேட்க mp3

    http://www.bbc.co.uk/tamil/arts_and_culture/2013/01/130111_tamilsongoscarrace.shtml

    “Life of Pi,”
    நடித்த சூரஜ் ஷர்மா, தான் முன் நடித்தில்லை என்று சொல்கிறார். தில்லியைச் சேர்ந்த இவருக்கு 19 வயதுதான்.

     
  • Tags: , , ,

    கன்னியரை கட்டிக்கொள்ள ஆசை!

    ஆசை ஆசை கடலோர மரக்கலராயர் கன்னியரை கட்டிக்கொள்ள ஆசை
    மாமன் வீட்டுக்கே கல்யாணம் பண்ணி குடி போயிடலாம்
    கல்யாணத்தன்றே தந்துடுவார் பெண்ணோடு சொத்தையும்
    மாமன் சாக வேண்டுமென்றும் சொத்து கிடைக்க வேண்டுமென்ற வேண்டலில்லை
    நடு நிசியில் மாப்பிள்ளை களைத்திடாமல் ‘ஜாமப்’ பணியாரமும் கொடுப்பார்
    பெண்மக்களை போடி வாடி என அழைக்காமல் மரியாதையாக அழைத்திடுவார்
    தெரியாமல் குதிரைவீரர் (இராவுத்தர்) பெண்ணை கட்டிக் கொண்டு குதியாய் குதிக்கின்றேன்
    அறியாமல் வந்த என்னை அவர் குடும்பத்தார் ஆட்டிப் படைக்கின்றார்
    கடிவாளம் போட்டு கட்டிப் போட்டார்
    கிடைத்த பணமும் சேமித்த சொத்தும் குதிரைப் பெண்ணை பராமரிக்கவே போயிற்று
    ஆடியோடி நிக்கயிலே ஆசை அடங்கவில்லை
    கடலோரம் போய் கட்டிக் கொள்ள கொள்ளை ஆசை

    மரம்+கலம்+ராயர் – மரத்தால் செய்யப்பட்ட கலம்(கப்பல்)உரிமையாளர் என்பதே மரக்கலராயர் என்பதாகும். இது மருவியே மரக்காயர் ஆனது.
    (இராவுத்தர்=குதிரை ஒட்டி வணிகம் செய்தவர்)

    கவிதையோடு கலந்த ராகம்.
    watch?v=DqYkO9yd6BE&list=FLoabIjVbkTBBMUQ4hGHrCMQ&index=7&feature=plpp_video
    Beauty Tips for My Sisters in Islam
    Rymes of Praise wedding song

     

    Tags: , , ,

    பார்க்க பரவசமூட்டும் அழகிய பாரிஸ் நகரம்.

    பிரான்ஸ் சென்று வர பணம் அதிகம் தேவை .இருப்பினும் பார்க்க வேண்டிய நாடு. ஆங்கிலம் அறிந்தால் பிரான்ஸ் நாடு சுற்றி வர எளிது என்ற எண்ணம் வேண்டாம்.ஆங்கிலம் அறிந்தாலும் அங்கு அவர்கள் ஆங்கிலத்தில் பேச மாட்டார்கள். எங்கள் நாட்டுக்கு வருபவர்கள் எக்கள் மொழி அறிய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.பொதுவாக ஐரோப்பாவில் இங்கிலாந்தினை தவிர மற்ற நாடுகளில் ஆங்கிலம் பயன்படாது .

    உலகில் பிரான்ஸ் நாட்டில் வாழ்பவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.எப்படியாவது பிரான்ஸ் நாட்டு எல்லையில் பிறந்து விடுங்கள் மற்றதனை அரசாங்கம் பார்த்து கொள்ளும் என்ற பழமொழி உண்டு.அதனால் அந்த நாட்டு பிரஜையாகவும் ஆகி விடலாம் .அல்லது அந்த நாட்டு உரிமை பெற்றவர்களை(பிரஜை) திருமணம் செய்து கொண்டாலும் குடியுரிமை கிடைக்கும்.

    தமிழ் பேசும் மக்கள் ஓரளவு அந்த நாட்டில் உள்ளனர் . அதில் அதிகமாக , புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்களும் (காரைக்கால் , அம்பகரதூர் ) நீடூர் மற்றும் இலங்கை வழி வந்த தமிழர்களும் அதிகமாக உள்ளனர். அங்கு தமிழ் எழுத்து எழுதப்பட்ட கடைகளும் அதிகமாக உள்ளன.

    பிரான்ஸ் சென்று பார்த்து மகிழந்து வர வாழ்த்துக்கள் அதுவரை இங்கு படம் பார்த்து மகிழுங்கள்


     

    Tags:

    பூண்டு ரசம்

     
    Leave a comment

    Posted by on January 6, 2012 in video

     

    Tags:

    ஏழாம் அறிவு: பற்றி சீனத் திரைப்படம்!(வீடியோ)

    “முருகதாஸ் 7 ம் அறிவு என்ற படம் எடுத்ததால் தான், நாங்கள் போதி தர்மர் பற்றி அறிந்து கொண்டோம்.” என்று பல தமிழர்கள் பெருமைப்படுகின்றனர்.

    “போதி தர்மர் தென்னிந்தியர் என்பதையும், குங்பூ போன்ற கலைகள் இந்தியாவில் இருந்து சென்றன என்பதையும் சீனர்கள் மறைப்பதாக” கூறுகின்றனர். உண்மையில், போதி தருமனையும், அறிவியலையும் தமிழர்கள் மறந்து விட்டாலும், சீனர்கள் நினைவு வைத்திருக்கின்றனர்.

    Dim lights

    அதற்காக இந்தியர்களுக்கு (அல்லது தமிழர்களுக்கு) நன்றிக் கடன் பட்டிருப்பதையும் அவர்கள் மறைக்கவில்லை. அதற்கு ஆதாரம், 1994 ம் ஆண்டு, சீனர்கள் தயாரித்த போதி தர்மரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் திரைப்படம். ஹாங்ஹாங்கில் தயாரிக்கப் பட்ட சீன மொழி பேசும் திரைப்படம், ஆங்கில உபதலைப்புகளுடன் வெளியாகியது.

    முருகதாஸ் தனது அரசியல் உள்நோக்கத்திற்காக, பத்து நிமிடம் மட்டுமே கூறும் போதி தர்மரின் கதையை, சீனத் திரைப்படம் மணித்தியாலக் கணக்காக விபரிக்கின்றது. போதி தர்மன் குறித்த உண்மைத் தகவல்கள் இந்தப் படத்தைப் பார்ப்பவர்களுக்குப் புரியும்.

    தகவல்(மின்னஞ்சல் வழி):   malathi.arulmani

    Source :http://www.inneram.com/

     

    Tags: ,

    தீபாவளி வாழ்த்துக்கள்! + தீபாவளி சிறப்பு பட்டி மன்றம்

    தீபாவளி வாழ்த்துக்கள் வாழ்த்தி வழங்கி  கவலைகள் மறந்து மனகிழ்ந்து உற்சாகமாக உறவினர், நண்பர் மற்றும்  அனைத்து மக்களும் நல்வாழ்வு வாழ வாழ்த்துவோம்

     

    Tags:

    காதல் வேண்டும்….

    உயிரைத் தொலைத்தேன் அது உன்னில் தானோ
    இது நான் காணும் கனவோ நிஜமோ..

    மீண்டும் உன்னைக் காணும் வரமே
    வேண்டும் எனக்கே மனமே மனமே

    விழியில் விழுந்தாய் ஆஆஆஆஆ
    என்னில் எனதாய் நானே இல்லை
    எண்ணம் முழுதும் நீதானே என் கண்ணே

    உயிரைத் தொலைத்தேன் அது உன்னில் தானோ
    இது நான் காணும் கனவோ நிஜமோ..
    Read the rest of this entry »

     

    Tags:

     
    Follow

    Get every new post delivered to your Inbox.