RSS

Category Archives: 1

அடிப்படையான job ethics

நான் பணிபுரிந்துக் கொண்டிருக்கும் நிறுவனம் எனக்கு எட்டாவது நிறுவனம். முந்தைய ஏழு நிறுவனங்களிலும் கூட இனிப்பும், கசப்பும் கலந்த நிறைய அனுபவங்கள். அவற்றில் மூன்று நிறுவனங்களில் சம்பளப் பாக்கி கூட உண்டு. கடைசியாக வெளிவந்த நிறுவனம் எனக்கு அறுபதாயிரம் தரவேண்டும். சில நிறுவனங்களின் நிர்வாகம் எனக்கு பிடிக்காமல் இருந்திருக்கிறது. சில ஊழியர்களோடு கருத்து வேறுபாடு இருந்திருக்கிறது. ஏழு நிறுவனங்களில் இருந்தும் விலகியபோது ஏழுவிதமான காரணங்கள் இருந்திருக்கிறது. இரண்டே நிறுவனங்களில்தான் அவர்களிடமிருந்து விடைகொடுத்து மகிழ்ச்சியாக வெளியேற முடிந்தது.

ஏன் சொல்கிறேன் என்றால் இந்த நிறுவனங்களைப் பற்றியோ, இங்கு பணியாற்றிய சகப்பணியாளர்களைப் பற்றியோ எங்குமே பொதுவெளியில் தவறான முறையில் எதையும் பேசமாட்டேன். வேண்டுமானால் இனிமையான விஷயங்களை பெருமையாக பகிர்ந்துக் கொள்வதுண்டு. இந்த தன்மையை அடிப்படையான job ethics என்றும் நம்புகிறேன்.
Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on May 13, 2013 in 1

 

Tags: , , ,

முல்லாவின் கழுதை காணாமல் போய் விட்டது!

souk - zool donkeyகழுதை காணாமல் போனதற்காக முல்லாவிற்கு ஆறுதல் சொன்னார் ஒருவர்
முல்லா சொன்னார் ‘ நல்ல வேலை கழுதையின் மேல் நான் இல்லை.அப்படி இருந்திருந்தால் நானும் காணாமல் போயிருப்பேன்’
எதையும் தாங்கும் கழுதை .
முல்லாவுக்கு எதையும் தாங்கும் இதையம்

 
Leave a comment

Posted by on April 6, 2013 in 1

 

Tags: ,

புன்னகை பூத்தல் ஓர் தர்மம்

Ansar nwshathvlcsnap-2011-05-25-20h41m38s148
மல்லிகை பூக்க மணம் வீசும்
புன்னகை பூக்க முகம் மலரும்
மல்லிகையின் மணம் மனத்தைக் கவரும்
புன்னகையின் மனம் மாட்சிமைப் பெரும்

கனி இருக்க காய் நாடுவதேன்
முல்லை இருக்க முள்ளை நாடுவதேன்
முகம் இறுக்கத்தை காட்டி கடுமையைத் தவிர்த்திடு
புன்னைகை முகம் காட்டி மகிழ்வைக் கொடுத்திடு
அன்பு மயமாக இவ்வுலகை ஆளும் யாஅல்லாஹ்
‘தர்மம்’ – தேரிழந்தூர் தாஜுதீன்

 
2 Comments

Posted by on March 26, 2013 in 1

 

Tags: ,

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) – இளையராஜா டொராண்டோ

Ilayaraja Torontoயூனியன் சப்வே ரயிலைவிட்டு இறங்கி ராஜர்ஸ் செண்டரை நோக்கி நான் நடக்கும்போது மணி ஐந்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. என்னோடு பெண்கள் தங்களின் அழகழகு கூந்தலுடன் நடந்துவந்தார்கள். ஈழப் பெண்களுக்குக் கூந்தல் அழகுதான். கார்மேகக் கூந்தல் என்று வர்ணிப்பார்களே அதனினினும் அடர்த்தியான கூந்தல்.

ஆனால் ஒருவர் தலையிலும் மல்லிகைப்பூ இல்லை. அது எனக்குச் சற்றே வருத்தமாக இருந்தது. ஆனால் என் வருத்தத்தைக் கண்ட கனடாவின் பனிப்புயல் சும்மா இருக்குமா? அப்படியே வெள்ளை வெள்ளையாய்ப் பனிப்பூக்களைச் சூடிவிட்டது அவர்கள் தலையில். எனக்கு அப்போதே மகிழ்ச்சி என்ற ஒரு எழுச்சி உள்ளுக்குள்ளிருந்து புறப்பட்டுவிட்டது.

நான் பெரும்பாலும் என் வேனில்தான் எங்கும் செல்வேன். ஆனால் (பார்க்கிங்) தரிப்பிடத் தகறாறு காரணமாக வாகனத்தைப் பாதியில் விட்டுவிட்டு மீதிதூரத்தை, அதாவது கென்னடி சப்வேயிலிர்ந்து யூனியன் சப்வேவரை ரயிலில் பயணப்பட்டேன். வெகு காலங்களுக்குப் பிறகு சப்வே ரயில் பயணம் நன்றாகவே இருந்தது.

ஒருவழியாய் உள்ளே வந்தாச்சு. வந்தால் அங்கே இளையராஜாவைக் காணவில்லை. நீயா நானா கோபிநாத் கூட்டத்தைக் கட்டுக்குள் வைக்க கண்டதையும் செய்துகொண்டிருக்கிறார்.

கோபி நீ போய் ராஜாவை அனுப்பி வைக்கிறாயா இல்லையா என்று ஒரே விசில் விசில் விசில்……….. நீயா? நானா? என்று கோபி ஒரு பக்கமும் ஆவல் கொண்ட கூட்டம் இன்னொரு பக்கமுமாய் ஒரே கூச்சல்…

  • முதலில் இந்த ராஜர்ஸ் செண்டரைப் பற்றி சில வார்த்தைகள் சொல்லியாக வேண்டும். இது திறந்து மூடும் கூரையைக் கொண்ட பிரமாண்டமான அரங்கு.

    இதுதான் உலகத்திலேயே 20 நிமிடங்களில் திறந்துமூடும் முதலாவது பெரிய அரங்கு என்று சொல்கிறார்கள்.

    இது நிகழ்ச்சிகளுக்கான அரங்குமட்டும் இல்லை மிகப்பெரிய விளையாட்டு மைதானமும் ஆகும். இந்த விளையாட்டு மைனாத்தில் எட்டு 747 விமானங்கள் அல்லது 743 இந்திய யானைகள் சுலபமாக நிறுத்தலாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

    இதன் பழைய பெயர் ஸ்கைடூம் -SkyDome. இதன் இன்னொரு முக்கிய அம்சம் இது CN Tower என்றழைக்கப்படும் கனடா தேசக் கோபுரத்தின் காலடியில் இருக்கிறது.

    இந்த அரங்கில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி அருமையாக நடந்தது. 25 ஆயிரம் ரசிகர்கள் வந்து அமர்க்களப்படுத்தி இருந்தார்கள். ஏ ஆர் ரகுமானுக்கு இதைவிடவும் மிக அதிக கூட்டம் வந்திருந்தது. ஆனால் ஏ ஆர் ஆர்க்கு வந்த கூட்டம் தமிழர்கள் மட்டும் இல்லை. ஆனால் இளையராஜாவுக்கோ அவ்வளவு பேரும் தமிழர்கள். அது ஓர் ஆனந்த விசயம்.

    அமெரிக்காவின் பல பகுதிகளிலிருந்தும்கூட மக்கள் வந்து குவிந்திருந்தார்கள். கனடாவிலும் டொராண்டோ மட்டும் இல்லாமல் மாண்றியால் போன்ற பல தூர ஊர்களிலிருந்தும் வந்து குவிந்திருந்தார்கள்.

    வெளியில் பனி கொட்டுகிறது. உள்ளே இசை கொட்டுகிறது. அதுதான் ராஜா மழை!

    இலையில் விழுந்த பனித்துளி இலையின் நரம்புகளில் இயல்பாய் இழைவதுபோல் இளையராஜாவின் இசை இழைந்தோடியது.

    Gopinathநிகழ்ச்சி தொடங்கவேண்டிய நேரம் மாலை 5 மணி. நான் என் அரங்கச்சீட்டை வாங்கும்போதே அதன் அமைப்பாளர்கள் சொல்லிவிட்டார்கள், அரங்கு 4 மணிக்கே திறந்துவிடும். ஆனால் இசை நிகழ்ச்சி ஏழுக்குத்தான் தொடங்கும் என்று.

    அது சரி, ஐந்து முதல் ஏழுவரை மக்களை எதைச் சொல்லி சமாளிப்பது? அதற்காகப் பணிக்கப்பட்டவர்தான் நீயா நானா கோபிநாத். ஆரம்பத்தில் கோபிக்கு ஏகோபித்த வரவேற்பைக் காட்டிய கூட்டம் நேரம் செல்லச் செல்ல கடுப்பைக் காட்டத் தொடங்கிவிட்டது. நானா மாட்டேங்கிறேன், இதோ வந்துகிட்டே இருக்கார்ல என்று கோபி சொன்னது சிரிப்பாக இருந்தது.

    கோபி கூடவே ஒரு பெண்ணைத் துணைக்கு வைத்துக்கொண்டு, யாருக்கெல்லாம் பாடத்தெரியும் பாடுங்க என்று ஒவ்வொருவரிடமும் மைக்கைக் கொடுத்தார்.

    ஒரு சிறுமி மட்டும் பாடினாள். மற்றவர்களெல்லாம்….. மக்களை பாடி (body) ஆக்கினார்கள். இடையில் வந்த ஓரிரு குரல்கள் சட்டென முடிந்தாலும் பரவாயில்லை என்ற வகையில் பாடியது.

    கோபிநாத்திடம் நான் நிறைய எதிர்பார்த்தேன். இளையராஜாவின் இசைக் கதைகளைத் தொகுத்துச் சொல்லி இருக்கலாம். உலக இசை பற்றிப் பேசி இருக்கலாம்.

    கனடாவில் இந்தத் தமிழனின் இசை நிகழ்ச்சி பற்றிப் பேசி இருக்கலாம். ஆனால் அது எதுவுமே செய்யாமல், வெறுமனே நேரத்தை எப்படி இழுப்பது என்று மேலும் ஜவ்வாக்கினார்.

    சட்டென திட்டத்தில் இல்லாமல் அவர் முன் நிறுத்தப் பட்டிருப்பார் என்று நினைக்கிறேன்.

    இடை இடையே வெள்ளைக்கார மந்திரிகள் வந்து வணக்கம், நன்றி என்று சொல்லிப் போனார்கள். ஒருவர் மட்டும் கொஞ்சம் காகிதத்தில் எழுதிக்கொண்டு வந்து இரண்டு வரி வாசிக்க முயன்று எல்லோரையும் சிரிப்பில் ஆழ்த்தினார்.

    அரங்கின் உள்ளே சுடு-நாயும் ;-) குளிர்பானமும் வாங்க நான் வரிசையில் நின்றபோது ஒருவர் மிகவும் கோபமாகக் கத்திக்கொண்டிருந்தார். அஞ்சு மணிக்குன்னு சொன்னானுவ. மணி ஏழாவப் போவுது. எவனையும் காணோம். எட்டுக்கு ஆரம்பிச்சு பத்துக்கு முடிச்சுடுவானுவ. எல்லாம் போச்சு. ஏமாத்துக்காரணுவ ஏமாத்திட்டானுவ. இளையராஜாவை கண்ணுலயே காட்டமாட்டேன்றானுவ…

    டிரினிடி இவெண்ட்ஸ் தான் ஏற்பாட்டாளர்கள். இத்தனை மணிக்குத்தான் நிகழ்ச்சி தொடங்கும் என்ற சரியான தகவலை முன்கூட்டியே அவர்கள் சொல்லி இருக்க வேண்டும். அல்லது கோபிநாத் மூலமாகவாவது இத்தனை மணிக்கு மிகச் சரியாக இளையராஜா தோன்றுவார் என்றாவது சொல்லி இருக்க வேண்டும்.

    பாவம் கோபி அல்லாடினார்.

    இதன் காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்தேன். வசூல்தான் வேறென்ன. கூட்டம் இன்னும் வரட்டும் என்றும் தனிச்சலுகை டிக்கட் விற்பனைக்காக கனடிய தமிழ் வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவைகளைப் பயன்படுத்தி மக்களை வரவழைப்பதுமாக இருந்திருக்கிறார்கள். கூடவே அநியாய விலை விற்கும் அந்தக் கடைகளுக்கு எந்தக் கூட்டம் வரும்? 3 டாலர் கொடுத்து வாங்கவேண்டியதை 30 டாலர் கொடுத்து வாங்கிக்கொண்டிருந்தோம்.

    25000 பேர் வந்திருந்தார்கள் என்றாலும் இது அரங்கு நிறைந்த கூட்டம் இல்லை. அரங்கு திணரும் கூட்டம் என்றால் அது 60 ஆயிரத்தைத் தாண்டவேண்டும்.

    ரசிகர்களுக்கு வேண்டுமானால் இது கலை நிகழ்ச்சி. ஆனால் ஒருங்கிணைப்பாளர்களுக்கு இது வருமான முயற்சிதானே?

    இளையராஜா நிகழ்ச்சியின் இடையில் பல முறை குறிப்பிட்டார். நாங்கள் நிறைய தொகுத்துக்கொண்டு வந்திருந்தோம். நேரம் போதாததால் எல்லாவற்றையும் உங்களுக்கு வழங்க இயலவில்லை என்றார். இயன்றவரை சிறப்பானவற்றைத் தருகிறோம் என்றார்.

    ஆனால் நிகழ்ச்சி 7 மணி தொடங்கி 11:45 வரை சென்றது அதாவது நாலேமுக்கால் மணி நேரம். இடையில் வந்துபோல சில மந்திரிகளுக்கு 15 நிமிடங்களைக் கழித்துவிட்டாலும் இளையராஜா நாலரை மணி நேரங்கள் எங்களோடு இருந்தார்.

    நீங்கள்லாம் கொட்டும் பனி என்றும் பாராமல் 5 மணிக்கே வந்து உக்கார்ந்து இருக்கீங்க. ஆனால் நாங்க இந்திய நேரப்படி இந்த அரங்குக்கு அதிகாலை மூணு மணிக்கே வந்துட்டோம் என்று விவேக் காமெடி பண்ணப் பார்த்தார், ஆனால் யாரும் ரசிக்கவில்லை.

    ஆறரை மணி நேரம் இருக்க வேண்டிய நிகழ்ச்சி நாலரை மணி நேரமாகக் குறைந்துவிட்டதே என்ற கவலை தெரியவில்லை மக்களிடம். ஐந்து மணிக்கே ஏன் ராஜா வரவில்லை என்ற ஆதங்கம்தான் தெரிந்தது.

    நேரம் தாழ்த்தித் துவங்கியதுமட்டுமல்ல. இன்னொரு குளறுபடியையும் செய்தார்கள் டிரினிட்டி இவெண்ட்ஸ்காரர்கள். ஏகப்பட்ட பாடகர்களைப் பட்டியலில் இட்டிருந்தார்கள். அங்கே வந்ததோ அதில் கால்வாசிகூட இருக்காது.

    மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் எஸ்பிபி வந்திருந்தார், ஹரிஹரன் வந்திருந்தார். சித்ரா வந்திருந்தார். சாதனா சர்க்கம் வந்திருந்தார். கார்த்திக்
    வந்திருந்தார். யுவன் & கார்த்திக்ராஜா வந்திருந்தார்கள். அவ்வளவுதான். வேறுயாரும் வரவில்லை.

    நிகழ்ச்சித் தொகுப்பினை வழங்குவதற்கு கோபி வந்திருந்தார். பார்த்திபன் வந்திருந்தார். விவேக் வந்திருந்தார். ப்ரசன்னாவும் சினேகாவும் ஜோடியாக வந்திருந்தார்கள்.

    இவர்களோடு இளையராஜா. இளையராஜாவோடு நாங்கள்.

    Ilayaraja 1அரங்கு நிறைய வந்திருப்பவர்களிடம், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் எந்தத் தகவல் பறிமாற்றமும் செய்யவே இல்லை. இத்தனை மணிக்குத்தான்
    தொடங்குவோம், வர முடியாமல் போன பாடகர்களுக்காக வருந்துகிறோம் என்றெல்லாம் ஏதும் சொல்லவில்லை.

    இது ஒரு விஜய் நிகழ்ச்சிகூட. அவர்களும் ஏதும் சொல்லவில்லை.

    இளையராஜாவுக்கு நேரம் போதவில்லை என்பதை இளையராஜாவே மேடையில் சொல்லிவிட்டார். இதெல்லாம் ஒருங்கிணைப்பாளரின் குறைபாடு என்றே நான் காண்கிறேன். இளையராஜாவை ஒன்றும் சொல்லமுடியாது.

    அந்த இரண்டு குறைகளைத்தவிர வேறு ஏதும் குறையே இல்லை. எல்லாம் நிறைதான் நிறைதான் நேர் நேர் நிறைதான் ராஜா இசையில்.

    அந்த இரு குறைகளுக்கும் நிச்சயமாக ராஜா பொறுப்பு இல்லை. அது அமைப்பாளர்களின் சதியன்றி வேறில்லை.

    இளையராஜா வந்ததும் வழக்கமான தன் ஜனனி ஜனனியைக் கம்பீரமாகத் தொடங்கினார். அந்த அற்புதப் பாட்டுக்கு அரங்கம் குத்தாட்டமே போட்டது. விசில் ராக்கெட்டுகளாய்க் கிளம்பி அரங்கத்தையே அல்லோலகல்லோலப்படுத்தியது.

    உங்களிடம் ஒரு முக்கியமான வேண்டுகோள். எவ்வளவு வேணும்னாலும் கைத்தட்டிக்கங்க, கூச்சல் போட்டுக்கங்க விருப்பம்போல உங்கள் உணர்களை
    வெளிப்படுத்திக்கங்க. ஆனால் இந்த விசில் மட்டும் வேண்டாம். விசில் என்றாலே எனக்கு அலர்ஜி. என்று இளையராஜா கறாராகக் கூறிக்கொண்டிருக்கும்போதே ஒரு மூலையிலிருந்து விசில் ஒன்று எம்பிக் குதித்து ராஜாவை நோக்கி ஏவுகணையாய் வந்தது.

    அவ்வளவுதான் ராஜாவுக்கு ’அது’ வந்துவிட்டது. ஒரு முறைமுறைத்தார். அந்த விசிலும் உயிரைவிட்டுவிட்டது. விசில் அடிச்சீங்கன்னா நான் போய்க்கிட்டே இருப்பேன் என்றுவேறு ஒரு அலாரக்குண்டு (டைம்பாம்) வைத்தார்.

    விசிலடிச்சாங்குஞ்சுகள் வாடி வதங்கி வெம்பி வெறுத்துவிட்டார்கள். அதன் பின்னெல்லாம் ஒரே அமைதிதான். கைத்தட்டுங்க கைத்தட்டுங்க என்று விவேக் கெஞ்ச வேண்டியதாயிடுச்சு.

    இப்படித்தான் அண்ணே ரொம்ப ஸ்ட்ரிக்டு…. ஸ்ட்ரிக்டு…. ஸ்ட்ரிக்டு…. என்று விவேக் அடிக்கடி சொன்னது அரங்கத்தினரை சிரிப்பு ஞானிகளாய் ஆக்கியது.

    இளையராஜா கொஞ்சம் மேடையைவிட்டு உள்ளே சென்றார். அதைப் பயன்படுத்திக்கொண்ட விவேக், அரங்கத்தை விசிலடிக்க உற்சாகப்படுத்தினார். அவரு வந்துருவாரு இத்தோடு நிறுத்திக்கவும் செய்யுங்க என்றும் சொன்னார்.

    இந்த விசிலுக்கும் ராஜாவுக்கும் இடையில ஒரு கதை இருக்கு. உண்மையிலே ராஜாவுக்கு விசில்னா ரொம்பப் பிடிக்கும் அதை அப்புறம் சொல்றேன் விவேக் விவரித்தது ஒரு இசைக்கதை.

    காதலின் தீபம் ஒன்று என்ற அற்புதமான பாடலை தரும்போது இளையராஜாவுக்கு கடுமையாக உடல்நலம் சரியில்லையாம். அப்போது விசில் வழியாகவே கொடுத்த பாட்டுத்தான் அதுவாம். கைத்தட்டல்கள் ராஜர்ஸ் கோபுரத்தைத் திறந்து மூடின.

    (தொடரும்)
    Source : http://anbudanbuhari.blogspot.in/2013/02/ilayaraja-toronto-16-feb-2013-part-1.html
    Catching Canada.- கவரும் கனடா

     
  • Leave a comment

    Posted by on February 21, 2013 in 1

     

    Tags: , ,

    எளிது எளிது அறிவுரை சொல்வது எளிது!

    advice1மற்றவர்களுக்கு அற்புதமாக அறிவுரை சொல்லும் நாம் அதன்படி நடப்பதில்லை.
    அறிவுரையாக ஒருவரிடம் நாம் சொல்லும் போது கேட்பவர் இப்படியும் நினைக்கலாம்.
    ‘இவரிடம் இதனை யார் கேட்டார்கள் ,பரப்புவதற்கு ஒரு செய்தி கிடைத்துவிட்டது அல்லது இவரை கண்டால் நாம் ஓடி விட வேண்டியதுதான்’ .

    அறிவுரை சொல்வது சிலருக்கு வியாதியாக மாறிவிடும்.யாருக்காவது அதனை சொல்லாமல் விடமாட்டார் .ஐயோ பாவம் என்று கேட்டு விடுவர் சிலர்.

    அறிவுரை எப்படி இருக்க வேண்டும்!உலகில் இனாமாக யாராலும் கொடுகக்கூடியது அறிவுரை. இது நன்மை பயக்குமா! அல்லது பாதிப்பினை உண்ட்டாக்குமா. இது கேட்காமலும் கிடைக்கும். அறிவுரை ஆலோசனையாகவும் இருக்கும். அறிவுரை நன்மை தரலாம்.அறிவுரை கலந்துரையாடலாக இருந்தால் நல்லது, நமது மகனாக இருந்தாலும் மற்றவர் இருக்கும்பொழுது சொல்வது உறவினை பாதிக்கும் .குடும்பத்தில் உள்ள வயதான பெரியவர்கள் தன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அறிவுரை சொல்வது எல்லோருக்கும் பிடிக்காமல் போகின்றது. ‘வயதானதால் ஏதாவது புலம்புகின்றார்’ என்று ஏளனமாக மற்றவர் பேசும் நிலைக்கு உள்ளாகின்றனர் அனுபவத்தை சொல்லி திருத்த முற்படும் பெரியோர் நிலை.

  • கல்வி கற்பதும் ஒரு அறிவுரைதான். கல்வியை கற்க வேண்டிய இடத்தில் கற்பதுபோல் அறிவுரையும் கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுக்க வேண்டிய நேரத்தில் கொடுக்கப்பட வேண்டும். அறிவுரை கொடுப்பவரும் அதற்க்கு தகுதியுடையவராக இருத்தல் வேண்டும்.
    புகைப் பிடித்துக் கொண்டே புகை குடிப்பது கெடுதல் என்பதுபோல் ஆகிவிடக் கூடாது.

    காலத்தின் மீது சத்தியமாக மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கிறான். ஆனால் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டும் நற்செயல்கள் புரிந்து கொண்டும் மேலும் ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்தும் பொறுமையைக் கடைபிடிக்குமாறு அறிவுரை கூறிக்கொண்டும் இருந்தார்களோ அவர்களைத் தவிர! (103:1-3)

     
  • Leave a comment

    Posted by on February 11, 2013 in 1

     

    Tags:

    வெற்றிக்குப் பத்து வழிகள்!

    நீங்கள் எப்போது மரணிப்பீர்கள் என்று உங்களால் கூற முடியுமா? நிச்சயமாக உங்களால் முடியாது! அடுத்த ஆண்டு மரணிக்கலாம்; அடுத்த மாதம் அல்லது அடுத்த வாரம் அல்லது அடுத்த நிமிடம்கூட நீங்கள் மரணிக்கலாம். ஆகவே அதற்குமுன்
    உங்கள் வாழ்வில் நீங்கள் என்ன அடைந்தீர்கள்?
    உங்களின் கனவு மற்றும் இலட்சியம் என்ன?
    உங்கள் வாழ்க்கைக்காக நீங்கள் போட்டுள்ள பெரிய திட்டம் என்ன?
    உங்கள் மரணத்துக்குப் பின் நீங்கள் எப்படி நினைவுகொள்ளப் படுவீர்கள்?
    ஒரு முஸ்லிமைப் பொருத்தவரை பிறந்தோம்; வாழ்ந்தோம்; மரணித்தோம் என்ற வகையில் இவ்வுலகில் வாழ முடியாது! அவ்வாறு எவ்வித இலட்சியமோ அதை அடைய முயற்சியோ இல்லாத வாழ்க்கை என்பது வீணானதுதான்!
    மரணத்துக்குப் பின் என்ன? என்பதைக் குறித்துத் திட்டமிட்ட வாழ்வை எதிர்நோக்குவோர் மட்டுமே இவ்வுலகத்தின் முக்கியத்துவத்தை உணர முடியும். அவ்வாறான ஒரு திட்டமிடலோடு வாழ்பவர்களால் மட்டுமே இலட்சியத்தை அடைய முடியும்.
    இவ்வுலகில் முஸ்லிம்களாக வாழ்பவர்கள், அவர்களின் இலட்சியமான சுவர்க்கத்தை அடையவும் மரணத்திற்குப்பின் ஈருலகிலும் நினைவுகூரப்படவும் எளிதான வழி உள்ளது. அதற்கு ஒவ்வொருவரும் தம் மரணத்திற்குமுன் கீழ்க்காணும் 10 விஷயங்களைச் செய்து முடித்து விட்டால் போதும்.
    தயாரா நீங்கள்?
    1. உங்கள் கடமைகளை நிறைவேற்றுங்கள்
    முஸ்லிம்களாகிய நமக்குப் பல கட்டாயக் கடமைகள் உண்டு. உதாரணமாக, ஐவேளைத் தொழுகைகளை முறையாக நிறைவேற்றுதல், வாழ்வில் ஒருமுறையேனும் ஹஜ் நிறைவேற்றுதல், ரமலானில் ஒரு மாதகாலம் நோன்பு நோற்றல், ஜக்காத் கொடுத்தல், ஜமாஅத்தாக இருத்தல், தலைமைக்குக் கட்டுப்படல், அநீதியை எதிர்த்துப் போராடுதல் ஆகியன. ஹஜ்ஜைப் பொருத்தவரை பெரும்பாலான வசதியுள்ளவர்கள் நினைப்பதுபோல், “வயதான பின்னர் செய்வேன்” என்று தள்ளிப் போடாமல் ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கு விரைவான முக்கியத்துவம் கொடுங்கள். விட்டுப்போன தொழுகைகளுக்காகக் குற்றம் பிடிக்கப்படாமல் இருக்க, இயன்றவரை சுன்னத்-நஃபில் தொழுகைகளை அதிகப்படுத்துங்கள். அத்தோடு, “இனிமேல் எந்த ஒரு கடமையான தொழுகையையும் விட்டு விடமாட்டேன்” என்று இப்பொழுதே உறுதி மொழி எடுப்பதோடு, அதனை இந்நிமிடத்திலிருந்தே செயல்படுத்த ஆரம்பியுங்கள். “தொழாதவன் என்னைச் சார்ந்தவனல்லன்” என்பதும் “தொழாதவன் காஃபிராகி விட்டான்” என்பதும் “முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்குமிடையிலான வித்தியாசம் தொழுகை” என்பதும் எம்பெருமானாரின் அமுதவாக்கு என்பதை எப்போதும் நினைவில் நிறுத்துங்கள்.
    2. கனவை நனவாக்குங்கள்
    நல்லவற்றுள் எதையாவது நீங்கள் செய்ய விரும்புகின்றீர்கள் எனில், அதனைப் பின்னர் என்று தள்ளிப்போடாமல் உடனே செய்ய துவங்குங்கள். சீனப்பெருஞ்சுவரை நடந்து கடக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?, பட்டதாரி ஆக வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?, டாக்டரேட் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? வழக்கறிஞராக வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? கலெக்டராக வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? புத்தகம் ஒன்று எழுத வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? சீன, ஜப்பானிய, அரபி மொழிகளைக் கற்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? எதுவாக இருந்தாலும் உடன் செயல்பாட்டில் இறங்குங்கள். ஒருபோதும் வாழ்வில் செய்யத் துடிக்கும் நல்ல விஷயங்களைத் தள்ளிப்போடாதீர்கள். கனவை நனவாக்குங்கள்!
    3. பெற்றோர்களை மகிழ்வியுங்கள்!
    நம் பெற்றோர்களே நமக்கு எல்லாம்! நமது மரியாதைக்கும் அன்புக்கும் கீழ்படிதலுக்கும் அவர்கள் உரித்தானவர்கள். அவர்களுடன் தினசரி குறிப்பிட்ட நேரத்தைச் செலவழிக்க முயலுங்கள். அவர்களுக்குப் பெருமை சேர்க்க முயலுங்கள்; ஒருபோதும் அவர்களின் மனதை வேதனைப்படுத்தி விடாதீர்கள். ஒன்றை எப்போதும் நினைவில் வையுங்கள்: “பெற்றோர்களை நாம் மகிழ்ச்சியாக வைத்திருந்தால், அல்லாஹ்வும் நம்மை மகிழ்ச்சியாக வைத்திருப்பான். பெற்றோர்கள் நம் மீது கோபமாக இருந்தால், அல்லாஹ்வும் நம் மீது கோபமாகவே இருப்பான்” என்று இஸ்லாம் கற்பிக்கிறது. ஆகவே, அவர்கள் மரணிக்கும்முன், அவர்களுக்குப் பெருமை சேர்ப்பதோடு அவர்களை மகிழ்வாகவும் வைத்திருங்கள். அவர்களின் மரணத்திற்குப்பின் அவர்களை நினைவுகூருங்கள்; அவர்களுக்காகப் பிரார்த்தியுங்கள்; அவர்களின் இலட்சியம் அல்லது நிறைவேற்ற நினைத்து முடியாலாகி விட்ட கடமைகள் ஏதாவது இருப்பின் அதனை நிறைவேற்றுங்கள்.
    4. உலகைப் பாருங்கள்
    நீங்கள் இருக்கும் இருப்பிடத்தில் மட்டுமே உலகைக் காண்பதாக இதற்கு அர்த்தம் கொடுக்காதீர்கள். அல்லாஹ்வின் அற்புதமான படைப்புகளைக் கூர்ந்து கவனியுங்கள். இயன்றால் ஃபாலஸ்தீனத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா, எகிப்து, மக்கா போன்ற இஸ்லாமிய வரலாற்றை எடுத்தியம்பும் நாடுகளை வலம் வாருங்கள். குறைந்தபட்சம் உங்களைச் சுற்றியுள்ள கிராம, நகரங்களையாவது வலம் வாருங்கள். நிச்சயமாக, அது உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இருப்பதோடு, அல்லாஹ்வின் படைப்புகளையும் அதில் உங்களின் பங்கையும் குறித்து உங்களுக்கு விளக்கித் தரும். Read the rest of this entry »

     
    1 Comment

    Posted by on April 22, 2010 in 1

     

    Tags: , , , , , , , , , ,

    முஸ்லிம் பெண்கள் ஏன் கல்வியில் பின்தங்கியவர்களாய் இருக்கிறார்கள்?


    இஸ்லாம் என்பது மதப் பிரச்சாரத்தில்தான் இருக்கிறது என்று சிலர் நினைக்கிறார்கள். நாம் மதப்பிரச்சாரம் செய்தால் நமக்கு ஆயிரம் நன்மைகள் கோடி நன்மைகள் என்று வந்து குவியும் இறைவன் நம்மை நேரே சொர்க்கத்துக்கு அழைத்துக்கொள்வான் என்று தவறாக நினைக்கிறார்கள்.

    இறைவன் மனிதர்களின் உயர்வினையே நிச்சயமாக விரும்புவான். தன்னை, தன் உறவுகளை, தன் சமுதாயத்தை உயர்த்துவதற்கு எவன் ஒருவன் பாடுபடுகிறானோ அதற்கான வெகுமதியாகத்தான் அவனை சொர்க்கத்துக்கு அழைத்துக்கொள்வான்.

    இறை நம்பிக்கை கொள்வது, தொழுவது, நோன்பு நோற்பது, ஈகை அளிப்பது, ஹஜ் என்னும் புனிதப்பயணம் செல்வது என்ற ஐந்து கடமைகளை மட்டும் செய்துவிட்டால் போதும் நமக்கு சொர்க்கம் நிச்சயம் என்று நினைத்துக்கொள்கிறார்கள் சிலர்.

    தன் முன்னேற்றம், தன் உறவுகளின் முன்னேற்றம், தன் சமுதாய முன்னேற்றம், பொது மக்கள் முன்னேற்றம், உயர் கல்வி, அறிவுடைமை, பெண் விடுதலை, முற்போக்கு எண்ணங்கள் போன்று எந்த முன்னேற்றத்திற்கும் தன்னால் இயன்றதைச் செய்யாது சிலர் இருந்துவிடுகிறார்கள்.

    அப்படியாய் வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோர் சொர்க்கம் செல்வது இயலுமா? உலகம் முழுவதும் முஸ்லிம் பெண்கள் கல்வியில் பின் தங்கியவர்களாக இருக்கிறார்கள். ஏன் என்ற காரணம் அலசப்படவேண்டும்.

  • ஒன்றை நாம் துவக்கத்திலேயே அறிந்துகொள்ள வேண்டும். ஆரம்பக் காலங்களில் உலகில் முஸ்லிம்கள் என்றில்லை எந்தப் பெண்ணுமே கற்றவளாய் இல்லை. அப்படி கற்றவள் மிகக் குறைவாகவே இருந்தாள். பின் ஒவ்வொரு சமுதாயமாக முன்னேறியது. ஆனால் முஸ்லிம் பெண்களோ இதில் கடை நிலையில்தான் இன்னமும் இருக்கிறார்கள்.

    முஸ்லிம் பெண்கள் சிறு வயதிலேயே திருமணம் செய்துகொள்கிறார்கள். 16 லிருந்து 18க்குள் திருமணம் முடிந்துவிடுகிறது. இந்திய சட்டம் 18 என்று சொல்வதால் போலி பிறப்புச் சான்றிதழ்களும் தயாரிக்கிறார்கள்.

    பதின்ம வயது நிறைவடைவதற்குள் திருமணம் செய்துவிட வேண்டும் என்று கட்டாயமாகப் பெண்களின் படிப்பை நிறுத்துகிறார்கள். 18 வயதைத் தாண்டிவிட்டால் மாப்பிள்ளை கிடைக்காது என்று அறிவில்லாமல் கவலைப்படுகிறார்கள். அவசியமே இல்லாமல் பயத்தில் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொள்கிறார்கள்.

    அடுத்தது, குழந்தை பெற்றுக்கொள்வதில் எந்தக் கட்டுப்பாடும் இருப்பதில்லை. 24 மணி நேரமும் பிள்ளைகளோடு போரடும் வாழ்வையே பெண்கள் பெறுகிறார்கள். ஏன் இத்தனை பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு அவதிபடுகிறீர்கள் என்றால் இறைவன் கொடுத்தான் என்று பொறுப்பில்லாமல் சிலர் சொல்வது வேடிக்கையிலும் வேடிக்கை.

    பல வீடுகளில் கணவன் தன் மனைவியை வீட்டில் பூட்டி வைப்பதையே விரும்புகிறான். கேட்டால் அது ஒன்றுதான் அவளுக்குப் பாதுகாப்பு என்கிறான். உண்மையில் அது அவளின் பாதுகாப்பா அல்லது அவனது சுயநலமா என்பதை ஆலோசிக்கவேண்டும்.

    இஸ்லாமிய குடும்பங்களின் பெரியோர்கள் பெண்களை அதைச் செய்யாதே இதைச் செய்யாதே என்று செய்யாதே பட்டியலைத்தான் பெரிதாக முன்வைக்கின்றனர். அதைச் செய் இதைச் செய் என்ற பெண் முன்னேற்ற வழிகளை கற்றுத் தருவதே இல்லை.

    நிச்சயமாக இஸ்லாம் மதம் கல்வி கற்பதைத் தடுக்கவில்லை. ஆடை கட்டுப்பாடையே அது வலியுறுத்துகிறது. சவுதி அரேபியாவில் இந்தியப் பெண்கள் அவர்கள் சொல்லும் கறுப்பு மேலங்கையைப் போட்டுக்கொண்டு மிக நன்றாகப் படிக்கிறார்கள். என்றால் பிரச்சினை உண்மையில் எங்கே இருக்கிறது? நிச்சயமாக ஆடையில் இல்லை.
    Read the rest of this entry »

  •  
    5 Comments

    Posted by on April 18, 2010 in 1

     

    Tags: , , , ,

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    அன்புடன் புகாரி

    இன்றைய ஒளிர்வாய்
    நேற்றுகளில் சிக்காத
    நெய்வாச நம்பிக்கைச் சுடர்கள்

    விழித்தளத்தில்
    இமைக்கரைகளைப்
    பெயர்த்தோடும்
    வற்றாத வண்ண வண்ணக்
    கனவு நதிகள்

    நித்தம் நித்தம் கையணைவில்
    நீண்டு வளரும்
    புத்தம் புதுச் சந்தோசங்கள்

    முதன்மைபெற்று முடிவற்று
    உயிர்தொட்டுத் தழுவட்டும்
    புத்தாண்டுப் புலர்வினிலே

    ——————————————-

    அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்

    சீசன்ஸ்நீடூர்

    SEASONSNIDUR

     
    Leave a comment

    Posted by on April 14, 2010 in 1

     

    தாய் சேய் நலம் – டாக்டர் க.பாலகுமாரி எம்.டி;டி.ஜி.ஒ

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    அன்புள்ள சகோதரர் அவர்களுக்கு,
    எங்களது மருத்துவமனையின்

    டைரக்டர்
    திருமதி.டாக்டர் க.பாலகுமாரி எம்.டி;டி.ஜி.ஒ; அவர்கள்
    சென்னை

    வளர்வேளச்சேரி என்ற பத்திரிக்கையில் (மார்ச் 2010 ) தாய்சேய் நலம் , மற்றும் திட்டமிட்டு கருத்தரித்தல் எழுதிய கட்டுரை.

    http://www.mudukulathur.com/medicaldetails.asp?id=260

    படிப்பதற்கு, பயணத்திற்கு,வீடு கட்ட,திருமணத்திற்கு

    என எல்லாவற்றிற்கும் திட்டமிடுகிறோம்.ஆனால் கர்ப்பம்

    தரிப்பதற்கு திட்டமிட்டு செய்கிறோமா?. நூற்றுக்கு 98 சதவீதம் மக்கள் திட்டமிடாமல்தான் கர்ப்பம் தரிக்கின்றனர்.

    திட்டமிட்டு கர்ப்பம் தரிப்பது என்றால் என்ன ?

    எதற்கெல்லாம் திட்டமிட வேண்டும்

    முதலில் வயது;

    21 வயதிற்கு மேல் கர்ப்பம் தரிக்க முயற்சி செய்வது நல்லது. 18 வயதில் கல்யாணம்

    செய்து  கொண்டால் கூட ஒரு சில வருடங்கள் தள்ளிப்போடுவது

    நல்லது.அதே போல் 35 வயதிற்குள் குழந்தைகளை பெற்று

    முடிப்பது நல்லது.

    சிறிய வயதில் கர்ப்பம் தரித்தால், தாயே இன்னும்

    முழு வளர்ச்சி அடைந்திருக்க மாட்டார். போதிய மனப்பக்குவம் இருக்காது.

    இரண்டாவதாக யோசிக்க வேண்டிய விஷயம், எடை .

    எடை 18 வயதிற்கு மேல்,உயரத்திற்கு ஏற்றவாறு

    இருக்க வேண்டும்.வயது ஏற ஏற எடை ஏறக்கூடாது.

    உயரத்திற்கு ஏற்ற எடையை எவ்வாறு கணிப்பது

    இதனை BMI  என்ற அலகு மூலம் கணிக்கவ

    BMI = BODY MASS INDEX.

    எடை = கிலோகிராமில்

    உயரம் =மீட்டரில்

    BMI = 20 -23  சரியான எடை

    BMI = 19 க்கு கீழ் குறைவான எடை நோஞ்சான்

    BMI = 24  – 30 சற்று அதிக எடை

    BMI = 31 க்கு மேல் குண்டு.

    கர்ப்பம் தரிக்கும் போது BMI 20 – 23 இருப்பது நல்லது.

    BMI 19 க்கு கீழ் இருந்தால் சற்று நன்றாக சாப்பிட்டு

    உடம்பைத் தேற்றிய பிறகு கர்ப்பம் ஆவது நல்லது.

    அதிக எடை , குண்டாக இருப்பவர்கள்,

    உணவுக் கட்டுப்பாடு,உடற்பயிற்சி செய்து எடையை

    குறைத்துக்கொள்வது நல்லது.

    நிறைய பேர் கர்ப்பம் தரிக்க முயற்சிக்கும்போது உடற்பயிற்சி செய்யக்கூடாது

    என்று நினைத்துக் கொண்டு உள்ளனர். கட்டாயம்

    உடற்பயிற்சி செய்யலாம் .செய்வது நல்லது.

    Read the rest of this entry »

     
    1 Comment

    Posted by on April 10, 2010 in 1

     

    Tags: , , , ,

    பணம் படுத்தும் பாடு!

    ஒரு மனிதன் தன் வாழ்க்கைத்தரத்தை பெருக்குவதற்காக என்னென்னவோ குறுக்கு வழிகளையெல்லாம் கையாளுகின்றான். தான் மட்டுமே இந்த உலகில் வாழவேண்டுமென்ற அற்ப ஆசைதான் அதற்கு காரணம்.

    பிற மனிதரும் தம் போன்ற சக மனிதர்தானே, அவனுக்கும் நமக்கு இருப்பது போலவே குழந்தைகள் உள்ளனவேசக மனிதர்தானே, அவனுக்கும் நமக்கு இருப்பது போலவே குழந்தைகள் உள்ளனவே…நம் குழந்தைக்கு, மனைவிக்கு, பெற்றோருக்கு உடல் நலம் சரியில்லை என்றால் நம் மனது எப்படியெல்லாம் பதைக்கின்றது, துடிக்கின்றது, நம் மனம் எவ்வளவு வேதனை அடைகின்றது என்ற எண்ணம் தன் மனதில் கொஞ்சமேனும் இருந்திருந்தால் அதைப்பற்றி சிந்தித்து இருந்தால் அவன் பொய் சொல்லி பணம் சம்பாதிக்க மாட்டான்அவன் பொய் சொல்லி பணம் சம்பாதிக்க மாட்டான். தடுக்கப்பட்ட வழிகளையும் அவன் தேட மாட்டான்.

    ஆனால், இன்று நாம் பார்க்கின்றோம் அவன், “தான் மட்டுமே சம்பாதிக்க வேண்டும்” என்பதற்காக எப்படிப்பட்ட கீழ்த்தரமான வேலைகளையெல்லாம் செய்கின்றான். தன்னுடன் வேலை செய்யக்கூடிய சக தொழிலாளியை தன் மேலாளரிடம், இவன் வேலை செய்வது சரியில்லை என்றெல்லாம் சொல்லி மற்றவர்கள் மீது வெறுப்பை உண்டாக்கி தான் மட்டுமே நல்லவன் என்ற ஒரு பிம்பத்தை உருவாக்கிக்கொண்டு வயிறு பிழைக்கக்கூடியவர்களைப் பார்க்கின்றோம்ம், இவன் வேலை செய்வது சரியில்லை என்றெல்லாம் சொல்லி மற்றவர்கள் மீது வெறுப்பை உண்டாக்கி தான் மட்டுமே நல்லவன் என்ற ஒரு பிம்பத்தை உருவாக்கிக்கொண்டு வயிறு பிழைக்கக்கூடியவர்களைப் பார்க்கின்றோம்.

    உழைக்கக்கூடிய மனிதனின் வேர்வை காயும் முன் அவனுடைய ஊதியத்தை கொடுத்து விடு என இஸ்லாம் கூறுவது ஒருபுறம் இருக்க அல்லும் பகலும், வெய்யிலிலும் மழையிலும் குளிரிலும் உயிரை பணயம் வைத்து வேலை செய்யும் ஏழை தொழிலாளர்களின் சம்பளத்தையும் கூட சில நிறுவனங்கள் மூன்று மாதம் கழித்துத்தான் சம்பளம் தருவோம். மூன்று மாத சம்பளம் எங்கள் கையிருப்பில் இருக்கும். நீங்கள் வேலையைவிட்டு நீங்கும் சமயத்தில் அப்பணத்தை  திருப்பி தந்து விடுவோம் என்று சொல்லிவிட்டு அந்தப் பணத்தை பேங்கிலே தன் பெயரில் இட்டுவிட்டு (எ:கா 50 பேருடைய மூன்று மாத சம்பளத்தை வங்கியில் இட்டால் எவ்வளவு வட்டி கிடைக்கும்) வரும் வட்டிப்பணத்தை வாங்கி சாப்படுகிறார்கள்.

    பொருள்களிலே வயிற்றுக்கு மனித உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய பொருள்களை கலந்து விற்று வாழக்கூடியவர்களைப் பார்க்கின்றோம். ஒரு புறம் இப்படி ஒரு கூட்டம் இந்த பூமியே எங்களுக்குத்தான் என்ற எண்ணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. Read the rest of this entry »

     
    1 Comment

    Posted by on March 31, 2010 in 1

     

    Tags:

     
    Follow

    Get every new post delivered to your Inbox.