RSS

Category Archives: கவிதைகள்(Poem)

தாய்

246433_522380837776948_1364810777_nதன்னலம் கருதாது சேய் நலம் கருதும்
தன்னலமற்ற தியாகத்தின் சின்னம் தாய்

தன்னை வருத்தி சேயை வளர்க்கும் இமயம்
தரணியில் நிகரற்ற புனித உறவு தாய்

தாய் நெடிலில் தொடங்கி மெய்யில்
முடியும் மெய்யான மெய் தாய்

எந்தத் தாயும் சேய்களை மறப்பதில்லை
இந்தச் சேய்களதான் தாயை மறக்கின்றனர்

உடலில் உயிர் உள்ளவரை என்றும்
ஒருபோதும் மறப்பதில்லை சேய்களைத் தாய்

மகன்கள்தான் மணமானதும் மறக்கின்றனர்
மகள்கள் மணமானாலும் மறப்பதில்லை

மனைவி வந்ததும் தாயை மதிப்பதில்லை
தாயோ மகனையே நினைத்து வாடுகின்றாள்

உறவுகள் ஓராயிரம் இருந்தாலும்
ஒப்பற்றத் தாயுக்கு ஈடு இணை எதுவுமில்லை

உலகில் யாரை மறந்தாலும் மகன்களே
உலகிற்கு வரக் காரணமான தாயை மறக்காதீர்கள்

ravi.gifகவிஞர் இரா .இரவி

 

Tags: ,

என்னடா காதல் இது ?

என்னடா காதல் இது ?
——————————-

என்ன இது காதல் ?

மகரந்தச் சேர்க்கைக்காய்
மலர்கள் மீது
வந்தமரும்
வண்ணத்துப் பூச்சிகளாய்,

ஹார்மோன்களின்
காட்டுக் கத்தலில்,
பூவுக்குள்
பூட்டிக் கொள்ளும் மோகத்தில்,
இருட்டுக் கதவுகளை
நோக்கிய
குருட்டு ஓட்டம் தானே இது !

மறுப்பீர்களா ?

சீண்டல்களை
சிரச்சேதம் செய்துவிட்ட
ஒரு காதல் ஜோடியைக்
கைகாட்ட இயலுமா
உங்களால் ?
Read the rest of this entry »

 

Tags: , , ,

நெருப்பு

12neruppuஊனும் பசியில் உயிரும் பசியில்
நோயும் பசியில் மருந்தும் பசியில்
பசியின் விசைக்கு மூலம் உண்டா
பசியைப் பார்த்த விழிகள் உண்டா

நிலமும் தின்னும் நீரும் தின்னும்
வெளியும் தின்னும் காற்றும் தின்னும்
நெருப்பே மூலம் பசியின் உருவம்
நெருப்பின் விசையே யாவும் எங்கும்

வெளிச்சம் இன்றி விழிகள் இல்லை
வெளிச்சம் விரிய கலைகள் மலரும்
வெளிச்சம் என்றும் நெருப்பின் எச்சம்
நிலவும் கூட நெருப்பின் மச்சம் Read the rest of this entry »

 

Tags: , , , ,

“திருப்பம்”

தடுக்கி விழுந்தால் தயங்காது மீண்டும்
அடுத்து வருமே அழகு திருப்பம்
இடுக்கண் வருதல் இயம்பும் திருப்பம்
படுத்து விடாது பற.

வாய்ப்புகள் வந்தால் விரைவுடன் பற்றுக
வாய்த்திடும் வேளை வருதல் திருப்பமே
ஒய்ந்திடா வண்ணம் ஒதுங்கும் திருப்பத்தை
ஆய்ந்திட வேண்டுமே ஆங்கு

அனுதினம் நம்மை அணுகும் பயிற்சி
அனுபவம் என்னும் அழகு திருப்பம்
மனிதனாய்ச் செய்யும் மடைமை திருந்த
புனிதனாய் மாற்றும் புவி

வண்டியின் வேகம் வளைவின் திருப்பத்தில்
தண்டனைச் சொல்லும் தவற்றின் திருப்பத்தில்
பண்டிதன் ஆதல் படிப்பின் திருப்பத்தில்
கண்டவுண் மையே கவி

 

குறிப்பு: இக்கவிதை 09/05/13 அன்று இலண்டன் வானொலியில் தேன்குரலர்சி அன்புத் தங்கை ஷைஃபா மலிக் அவர்களால் வாசிக்கப்பட்டதன் mp3 இணைப்பும் இணைத்துள்ளேன்.


AIbEiAIAAABECOuVn8-otZPmmgEiC3ZjYXJkX3Bob3RvKig3ZWVmNzcyMTA4ZDgzODgzMDg1OGU2OTEwOWI0YzU5ZGY2ZmU5ODEzMAGRdXdbItAaX3Y5uklIDJywRDODdA

அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

கவியன்பன்கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844/ 055 7956007
வலைப்பூந் தோட்டம்:http://www.kalaamkathir.blogspot.com/

09-05 ABUL KALAM.mp3 09-05 ABUL KALAM.mp3
1946K   Play   Download  
 

கவிதைப் போட்டியில் முதலாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட “கவியன்பன் கலாம்” கவிதை

தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பினால்
சர்வதேச மட்டத்தில் ஏப்ரல் மாதம் நடாத்திய கவிதைப் போட்டியில்
முதலாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட என் கவிதை

thadagam first prize april 2013நிகழும் செயலுக்கு நித்தம் இறையைப்
புகழும் வணக்கம் புரிந்தால் – அகமும்
முகமும் அமைதி முழுமை பெறுமே
சுகமும் கிடைக்கும் சுழன்று.

உப்பிட நாடும் உணவினைப் போலவே
இப்புவி வாழும் எவரும் புகழை
விரும்பிடச் செய்தல் விலக்கிட வேண்டா
அரும்பிடும் ஆசை அளவு

புகழ்ச்சியை நாடு புலமையைத் தேடு
இகழ்ச்சியைக் கண்டு இடிந்து விடாதே
நிகழ்ச்சிகள் வென்று நிரம்ப மனத்தில்
மகிழ்ச்சியைக் கொள்வாய் மலர்ந்து.

தோன்றிற் புகழொடு தோன்றக் குறளிலும்
சான்றுக் கிடைத்ததைச் சற்றும் குறைவின்றி
ஊன்றிச் செயல்படு; உன்னைப் புகழ்ந்திடத்
தோன்றும் எவர்க்கும் தொடர்ந்து.

560578_389207401120928_1943795262_n“கவியன்பன் கலாம்”
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844/ 055 7956007
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

 

Tags: ,

அம்மா என்னும் அன்பை நேசி!

mother3அம்மாவின் வியர்வையினால் வெந்த இட்லி
……அளித்திட்டச் சுவைக்குத்தான் ஈடும் உண்டோ?
அம்மாவின்  வியர்வையினால் அனைத்தும் உண்டோம்
……அம்மாவின் அன்புநம்மை அணைக்கக் கண்டோம்
அம்மாவின் அடக்கத்தைக் கண்டு தானே
…..அடக்கமவள் அடக்கத்தைக் கேட்கும் தானே
அம்மாவின் பண்புகண்டு பண்பு கூட
….. அவளுக்குப் பணிவிடையைச் செய்யும் தானே!

அன்புக்கு முகவரியை உலகில் கேட்டால்
……அம்மாவின் முகத்தைத்தான் உலகம் கூறும்
பண்புக்கும் பணிவுக்கும் விளக்கம் கேட்டால்
…..பாரிலுள்ளோர் அம்மாவைச் சுட்டிக் காண்பர்
இன்பத்தில் துன்பத்தில் இணையும் உள்ளம்
…..ஈடில்லா அம்மாவின் அன்பு வெள்ளம்
என்புக்கும் தோலுக்கும் அம்மா ஈந்த
…..இணையில்லாக் குருதியாலே நாமும் வந்தோம்! Read the rest of this entry »

 

Tags:

சுத்திகரிப்புச் சோதனை

evaluate சுய
சுத்திகரிப்புச் சோதனை
செய்து கொண்டாயிற்றா?

படைப்பின் இயல்பாம்
இச்சைகள் தலைதூக்க
படைத்தவன் வழிகொண்டு
அடக்கியாண்டு விட்டீரா?

சுயநலக் கிருமிகள்
தொற்றுவது இயல்பு
பொதுநல தடுப்பூசியால்
புத்துணர்வு பெற்றீரா?

கற்றைக் கற்றையாய்
காசுபணம் கிறக்கும்
ஏழைக்குப் பகிர்வதில்
எழுமின்பம் சுகித்தீரா?

நாடி நரம்புகள்
நாடுமின்பம் போதை
நரக நெருப்பெண்ணி
நீங்கிச் செல்வதுண்டா? Read the rest of this entry »

 

Tags:

பெண்ணே நீயும் புறப்படு….

கவிதை வானில் பாவரங்கில், புலவரேறு, தமிழ்மாமணி அரிமதி தென்னகனார் தலைமையில், நான் வாசித்தளித்த சந்தப் பாடலிது:
=======================================

பெண்

penn

 

 

 

மண்ணில் மலரும் பூக்களாய்
மலர்ந்து மணக்கும் பெண்மையே!
மென்மை மட்டும் வாழ்க்கையில்
மேன்மை யாமோ புறப்படு!               (மண்ணில்)

பேதை என்றே இருப்பதால்
பேரும் புகழும் வந்திடுமோ?
சூது நிறைந்த உலகையே
சுட்டெ ரிக்கப் புறப்படு!                     (மண்ணில்)

உள்ள துறைகள் அனைத்திலும்
உலகப் பெண்கள் இருக்கையில்
கிள்ளுக் கீரை  இந்தியரோ?
கிளம்பிக் கலக்கப் புறப்படு!                (மண்ணில்)

நாதம் ஒலிக்கும் மணியாக
நங்காய் நீயும் புறப்படு!
பாதம் மிதிக்கும் பூமியை
பாதை ஆக்கப் புறப்படு!                     (மண்ணில்)

tyaga

 

 

 

 

 

இராஜ. தியாகராஜன் Read the rest of this entry »

 

Tags: ,

துயர் விழுங்கிப் பறத்தல்

il_fullxfull.257983696பறந்திடப் பல
திசைகளிருந்தனவெனினும்
அப் பேரண்டத்திடம்
துயருற்ற பறவையைத் தேற்றவெனவோ
சௌபாக்கியங்கள் நிறைந்த
வழியொன்றைக் காட்டிடவெனவோ
கரங்களெதுவுமிருக்கவில்லை

ஏகாந்தம் உணர்த்தி உணர்த்தி
ஒவ்வொரு பொழுதும்
காற்று ரணமாய்க் கிழிக்கையில்
மௌனமாகத் துயர் விழுங்கும் பறவை மெல்ல
தன் சிறகுகளால்
காலத்தை உந்தித் தள்ளிற்றுதான்

முற்காலத்திலிருந்து தேக்கிய வன்மம்
தாங்கிட இயலாக் கணமொன்றில் வெடித்து
தன் எல்லை மீறிய பொழுதொன்றில்
மிதந்தலையும் தன் கீழுடலால்
மிதித்திற்று உலகையோர் நாள் Read the rest of this entry »

 

Tags: , , , , , , ,

நினைத்துப் பார்க்கிறேன்

15747_102183289806853_100000455463856_55302_1348971_n
அவன் காசுதேடி வளைகுடா வந்தவன். காசு மட்டுமே வாழ்க்கை இல்லைதான். ஆனால் காசே இல்லாமல் வாழ்க்கை என்ற வார்த்தையைத் கூட எவராலும் உச்சரிக்க முடியாதே வளைகுடா கடலில் உப்பு அதிகம். இவன் போன்றவர்களின் கண்ணீரே காரணமாய் இருக்குமோ என்னவோ

ஒருமாத விடுமுறை என்பதுதான், ஒரு முழு வருடத்திற்கும் இவன் கொள்ளும் ஒரே நிஜமான உறக்கம். அந்த உறக்கத்தின் கனவுகளாய் வந்த எத்தனையோ இனிப்பான விஷயங்கள் பிறகெல்லாம் இவன் உயிரையே ஆக்கிரமிக்கும்.

தன் விடுமுறையை இரட்டிப்பாய் நீட்டித்து இம்முறை மணமுடித்த இவனுக்கு மோகம் முப்பது நாள் என்பது ஒரு தப்பான தகவல். பிரிவை நினைத்தே பிரியம் பீறிட்ட இவன், மோகம் முந்நூறு வருஷம் என்று சத்தியம் செய்கிறான்.

பிரிந்துவந்த அன்றே தன் புது மனைவிக்கு இவன் எழுதிய முதல் கடிதமாய் இக் கவிதை விரிகிறது

நெத்தியெங்கும் பூப்பூக்க
நெஞ்சமெங்கும் தேன்வடிய
முத்துமுத்துக் கண்மயங்க
முந்தானை தான்விலக

  • புத்தம்புதுச் சுகங்கோடி
    பொங்கித்தினம் நீவடிக்க
    அத்தனையும் என்னுயிரை
    அதிசயமாய்த் தொட்டதடி

    கொஞ்சல்மொழித் தேன்குடமே
    கொத்துமல்லிப் பூச்சரமே
    மிஞ்சியிட்ட முதல்நாளே
    மிச்சமின்றித் தந்தவளே

    கொஞ்சநஞ்சம் இருந்தாலும்
    கொஞ்சிமெல்ல நானெடுக்க
    பஞ்சணைக்கோ நொந்திருக்கும்
    படுக்கையறைச் சிவந்திருக்கும்

    மச்சான் என் மனம்போல
    மல்லிகைப்பூக் கூந்தலுடன்
    அச்சாக மயிலைப்போல்
    அழகாகக் காலெடுத்து

    உச்சிநிலா முகக்கனியில்
    உதடுகளோ துடிதுடிக்க
    பச்சைவனத் தென்றலெனப்
    பக்கத்தில் வந்தாயே

    என்னருகில் நீவந்தால்
    என்னென்ன செய்வதென்று
    எண்ணியவென் எண்ணங்களை
    எப்போதோ மறந்துவிட்டு

    எண்ணாத எதையோநான்
    எப்படியோ துவக்கிவைக்க
    என்னினிய பூங்கொடியே
    எல்லாமும் நீ ரசித்தாய்

    மன்மதனோ நானாக
    மானேநீ ரதியாக
    என்னென்ன சுகமுண்டோ
    எல்லாமும் நாம்கண்டு

    பொன்னாகப் பூவாகப்
    பூத்தோமே சிரித்தோமே
    இன்றுன்னைப் பிரிந்தவனாய்
    இருக்கின்றேன் உயிரில்லை

    மண்மீது பொழியாத
    மழைமேகம் மேகமல்ல
    தென்னையினைத் தழுவாத
    தென்றலுமோர் தென்றலல்ல

    கண்ணுக்குள் விரியாத
    கனவும் ஓர் கனவல்ல
    உன்னருகில் இல்லாவென்
    உயிரும் ஓர் உயிரல்ல

    கனவுகளில் வரச்சொல்லி
    கடிதம் நான் எழுதுகின்றேன்
    நினைவுகளில் உனையேந்தி
    நெடுந்தூரம் நடக்கின்றேன்

    இனிக்காத இவைபோன்ற
    எத்தனையோ ஆறுதலால்
    மனத்தீயைத் தணித்த வண்ணம்
    மரணத்தைத் தவிர்க்கின்றேன்

    இருஆறு மாதங்கள்
    எப்படியோ ஓடிவிடும்
    மறுகணமே பறந்துவந்து
    மனைவியேயுன் கைகோர்த்து

    சிறுகன்றைப் போல்துள்ளிச்
    செவ்வானாய்ச் சிவந்திடுவேன்
    கருவான நம்முயிரைக்
    கைகளிலே ஏந்திநிற்பாய்
    -அன்புடன் புகாரி
    Source : http://anbudanbuhari.blogspot.ca/2008/01/blog-post_8727.html

    பாசத்துடன் புகாரி.
    வாழ்த்துகள் கவிஞர் புகாரிக்கு.
    கல்யாணமாம் கல்யாணம்.-புகாரி.

     
  • Tags: , , ,

     
    Follow

    Get every new post delivered to your Inbox.