RSS

Category Archives: கட்டுரைகள்(Article)

மின்சாரம் – அப்படீன்னா என்னங்க !?

 

22-power-cut-300 மின்சாரம் – ஆட்சியை மாற்றுகிறது, ஆளுபவர்களை மாற்றி பேச வைக்கிறது, இருட்டை அழைக்கிறது, கொசுவுக்கு வரவேற்பு வைக்கிறது, உரைந்த ஐஸ்-ஐ உருக வைக்கிறது… இப்படியாக சொல்லிக் கொண்டே போனாலும், இன்றைய சூழலில் நமதூரில் மட்டுமா தமிழகம் முழுவதும் மின்சார தட்டுப்பாடு தலை விரித்தாடுகின்றது இதற்கு காரணம்தான் என்ன?

இதற்காக கார் எடுத்துகிட்டு போய் அப்பர் மலையேறி தனிமையில் யோசிக்க வேண்டியதில்லை, முதலில் தேவைக்கு  அதிகமாக நாம் மின்சாரத்தை பயன்படுத்த ஆரம்பித்தோம். அதற்கு காரணம் பெரும்பாலான எலக்ட்ரானிக் (மின்னனு) சாதனங்கள் மின்சாரத்தை அடிப்படையாக கொண்டு இருப்பதால் மின்சாரத் தேவையும் அதிகரித்துக் கொண்டே போகின்றது.

அடுத்ததாக அரசும்  உற்பத்தியை அதிகரித்து இருக்க வேண்டும்  ஆனால் முந்தை, இன்றைய அரசுகள்  அதைச் செய்யவில்லை. அவ்வாறு அரசு  செய்யாததால் ஆறு அறிவு  படைத்த மனிதன் இரவு முழுவதும் ஐந்து அறிவு படைத்த கொசுவை விரட்டிக் கொண்டு இருக்கின்றான்.

மின்சாரம் மின்சாரம் என்ற கூக்குரல்! ஆனால், மின்சாரம் அப்படின்னா என்ன  ? Read the rest of this entry »

 

Tags:

நொச்சி வந்தாச்சி

நொச்சி வந்தாச்சி
nochi treeஅரசோ, தனிமனிதர்களோ என்ன செய்தாலும் அடக்கமுடியாத கலவரம் ‘கொசுக் கலவரம்’. கொசுவர்த்தியில் தொடங்கி எலெக்ட்ரானிக் கொசுவிரட்டும் இயந்திரம் வரை அறிவியல் ஆயிரம் தீர்வுகளை இதற்கு கொடுத்தாலும், எல்லாவற்றையும் முறியடித்து, ‘ங்கொய்’ என்று காதில் ரீங்கரித்து மனிதனுக்கு ‘பெப்பே’ காட்டும் புரட்சிவீரன் கொசு. ராணுவத்தால் கூட அடக்கமுடியாத இப்பிரச்சினைக்கு நம்மூர் பாட்டிவைத்தியம் மூலமாக அதிரடித் தீர்வு காண களமிறங்கியிருக்கிறது சென்னை மாநகராட்சி. கொசுக்களுக்கு எதிரான மனிதர்களின் உரிமைப்போருக்கு சென்னை மாநகராட்சி பயன்படுத்தப் போகும் ஆயுதத்தின் பெயர் ‘நொச்சி’.

நீர்வழித்தடங்களின் ஓரத்தில் நொச்சிச் செடிகளை வளர்த்தல், வீடுகளுக்கு நொச்சி செடி வழங்குதல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் கொசுக்களை கட்டுப்படுத்தப் போவதாக சென்னை மாநகராட்சியின் சமீபத்தைய நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வாசிக்க வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் நொச்சியின் மகத்துவத்தை அறிந்தவர்கள் இதை வரவேற்கவே செய்வார்கள். சென்னை மாநகருக்கு மட்டுமின்றி இந்தியா முழுமைக்குமே கூட இத்திட்டத்தை விரிவுபடுத்தலாம். வெப்பமண்டல பிரதேசங்களுக்கு இயற்கை வழங்கியிருக்கும் மாபெரும் கொடை நொச்சி செடி.
Read the rest of this entry »

 

Tags: , ,

அது ஒரு குடைக் காலம்

941389_468657489879652_1544889649_nமுன்னொரு காலத்திலே நடந்து போனவங்க குடை பிடித்து நடந்தார்கள். அது மழையா.. வெயிலா எதுவாக இருந்தாலும் சரிதான். மனிதர்கள் குடையோடு நடந்தார்கள்.

குடை .. ஒரு ஆளுமையின் சின்னம். கொடையின் அடையாளம்..நாட்டாமையின் செங்கோல். குடை கையில் இல்லாவிட்டால் சிலருக்கு நடையே வராது.

குடை … ஆளுக்கு ஆள் வித விதமாக பயன்படுத்தப்படும் . பணக்காரனுக்கு குடை பிடிக்க பணியாள் உண்டு. மழை பெய்தால் பணியாளர் மழையில் நனைந்து கொண்டு எஜமானர் நனையாமல் குடை பிடிப்பார்.. அத்தனை எஜமான விசுவாசம் . எத்தனைபேர் மழையில் நனைந்தாலும் செல்வந்தர்கள் குடையின் கீழ் யாரும் ஒதுங்க முடியாது. பண்ணையார்கள் குடை பிடித்தபடி வந்து தங்கள் வயலில் வேலை செய்யும் பெண்களை

அதட்டுவார்கள். மலையாள தம்புரான்களும் தம்புராட்டிகளும் இரவிலும் பகலிலும் குடையின் கீழ் பரிவாரங்களோடு பவனி வருவார்கள். உயர் சாதியைத் தவிர இதர சாதியினர் குடை பிடிக்கக் கூடாது என்ற தடையும் குடைக்கு இருந்தது. Read the rest of this entry »

 

Tags: , ,

வேண்டுதல் வேண்டுமா?

தேவைகள் உள்ளவனே மனிதன். தன் தேவைகளைத் தானே தீர்த்துக்கொள்ளும் வல்லமை கொண்டவனும் அவன். ஆனால் எது தன் தேவை என்று அறியாதபோது அவன் தோல்வியுறுகிறான். தேவையறிந்து திட்டமிடுதலே எதிலும் முதல்படி. காரியம் என்பது கடைசிப்படிதான்.

வேண்டுதல் என்பது தேவையறிந்து திட்டமிடுவதைப் போன்றது. நிறைவேற்ற சிரமம் தரும் தேவைகளைத் தொகுத்து வைத்துக்கொண்டு இவற்றைச் செய்யவேண்டும் என்று உறுதி செய்துகொள்வதுதான் வேண்டுதல்

இந்த ஆற்றை எப்படியாவது கடந்துவிடவேண்டும் என்று நினைத்து முயற்சிகள் மேற்கொள்வோர் சிலர் இந்த ஆற்றைக் கடக்க இறைவா எனக்கு அருள்செய் என்று கூறிக்கொண்டு முயற்சிகள் மேற்கொள்வோர் சிலர். இந்த இருவருமே தன் தேவையைத் தன்னிடமே உறுதிப்படுத்திக்கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை. Read the rest of this entry »

 

Tags: , , ,

MRG:இங்கே இருவருக்கும் வெற்றி!

by: mansoor

Asset-300x99நீங்கள் ஒரு வரிசையில் (queue) நிற்கிறீர்கள். மெதுவாக நகர்கிறது அந்த வரிசை. இப்போது உங்கள் முறை. திடீரென்று ஒருவர் உங்களுக்கு முன்னால் குறுக்கே புகுந்து விடுகிறார். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?

ஒன்று – நீங்கள் மவுனமாக இருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் மென்மையானவர்(?). குறுக்கே புகுந்தவர் தன் காரியத்தை கன கச்சிதமாக முடித்துக் கொண்டு போய் விடுகிறார். இதற்குப் பெயர் மென்மை அல்ல! இது கையாலாகாத் தனம். Passiveness.

அல்லது – நீங்கள், “ஏய், முட்டாள்! என்னாச்சு உனக்கு? நாங்கள்ளாம் வரிசையிலே நிக்கிறது கண்ணுக்குத் தெரியலையா?” என்று கேட்கிறீர்கள். இதுவும் தவறு. அது முரட்டுத் தனம். Aggressiveness.

அப்படியானால் எப்படி நடந்து கொள்வது சிறப்பு என்கிறீர்களா?

நீங்கள் குறுக்கே புகுந்தவரிடம் அவருடைய முகத்தை நோக்கி உறுதியான ஒரு பார்வையுடன், “மன்னிக்கவும்! இப்போது எனது முறை!” என்று கூறுகிறீர்கள். அவ்வளவு தான். அவர் நகர்ந்து விடுகிறார். வார்த்தைகளில் கடுகடுப்பு தேவை இல்லை. குரல் உயர்த்திடத் தேவையில்லை. கொஞ்சம் Seriousness. அவ்வளவு தான். இந்த அணுகு முறையைத் தான் assertive communication என்கிறார்கள். அதாவது தன் நிலையை உறுதிப் படுத்திக் கொண்டு பேசிடும் முறை. Read the rest of this entry »

 

Tags: , , , ,

அகம் ஒரு கண்ணாடி போன்றது .

48046_463675883711146_1615250372_n” பிறர் எவ்வாறு தன்னிடம் நடந்து கொள்ள வேண்டும் என ஒருவர் விரும்புவாரோ அது போன்றே அவர் பிறரிடம் நடந்து கொள்ளட்டும். ” – நபிகள் நாயகம் ( ஸல் )

எல்லா மக்களுக்கும் கூறப்பட்ட அழகான தெளிவான ஒரு உபதேசம் இது. நாம் ஒருவரை மரியாதையாக “வாங்க..போங்க ” என்று அழைத்தால் அவர்களும் நம்மை ” வாங்க போங்க ” என்பார்கள். வாடா…போடா … வாலே..போலே ” என்றால் நமக்கும் அதுதான். சாதாரணமாக எல்லோரையும் “நாய்” என்று அழைக்கக் கூடியவன் உண்மையில் நாய்க் குணங்களுடனேயே நடமாடுகிறான். தன்னிலும் கீழாக மற்றவரை மதிப்பவன் கீழோனாகவே கருதப்படுவான். எல்லோருக்கும் மானம் இருக்கிறது. தன் மானத்தை உயர்த்திப் பிடிக்க அடுத்தவன் மானத்தை உரசிப் பார்ப்பவன் அவமானத்திற்கு ஆளாவான்.
Read the rest of this entry »

 

Tags: ,

புன்னகை -புதுசுரபி

947000_10151576989531575_436972249_n’தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர்காக்கும்.’ ………

மதிய உணவு இடைவேளையில் நண்பர் அழகாக பாடிக்கொண்டிருந்தார்.

பொதுவாக, ”தர்மம் இருக்கப்பட்டவனுக்குப் பொருந்தும்; என்றும்இல்லதாவன் நிலை என்ன?  அவன் தலையைக் காப்பதுகேள்விக்குறியோ?? என்று விவாதம் சூடிபிடித்தது.

தர்மம் என்பது அனைத்து மதத்திலும் மிகவும் வலியுறுத்தப்பட்டஒரு வழிமுறை.

ஒரு அரைத்துண்டு பேரிச்சம் பழத்தினையாவது தர்மம் செய்து அதன் மூலம் இந்தஉலகில் மட்டும் இல்லை, மறுஉலக வாழ்விலும் நரக நெருப்பிலிருந்து தலையைத் தக்கவைத்துக்கொள்ளும் சூட்சுமம் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. அட அது இதுன்னு ஒன்றுமே இல்லையா.. கவலையேவேண்டாம், ஒரு புன்னகை ஒரே ஒரு புன்னகை நம் எதிரிலிருப்போரைப் பார்த்து புன்னகை செய்தாலேபோதும் தர்மம் செய்த புண்ணியம் நிச்சயமுண்டு என்று நபிமொழியினை மேற்கோளிட்டும் விவாதம்தொடர்ந்து நடந்தது கொண்டிருந்தது.

’அதெப்படீங்க.. நாம் ஒருவரைப் பார்த்து புன்னகைத்தால் பதிலுக்குஅவரும் புன்னகைப்பார் அவ்வளவுதான். எப்படி.அது தர்மமாகும்? லாஜிக் இடிக்குதே?’  இது ஒரு நண்பர்.

‘இதிலே தலைகாக்கும் தந்திரம் எங்கிருக்கிறது?’ இது மற்றொரு நண்பர்.

அறிவியல் பேசலாமா? அவர்களின் கவனத்தைத் திருப்பினேன்.

உண்மைதான், நாம் ஒருவரைப் பார்த்து புன்னகைத்தால் பதிலுக்குஅவரும் புன்னகைப்பார். அப்போது நம் தலையை மட்டுமல்ல அவரின் தலையையும் நம் புன்னகை காக்கிறது.

நாம் கருவில் இருக்கும் போதே கற்றுக்கொண்டதுதான் புன்னகை. Read the rest of this entry »

 

Tags: , , ,

உழைப்பின் சிறப்பு

இஸ்லாம் உழைக்காமல் சோம்பேரிகளாக வாழ்வதனை விரும்புவதில்லை. இதனால் அனைவரும் உழைத்து வாழ வேண்டும் என தூண்டுகின்றது. இதனை பின்வரும் அல்குர்ஆன் வசனங்கள் விளக்குகின்றன.

“அவன் எத்தகையவனென்றால் உங்களுக்கு பூமியை வாழ்வதற்கு எளிதானதாக அவன் ஆக்கிவைத்தான். ஆகவே அதன் பல பாகங்களில் சென்று, அவன் உங்களுக்கு அளித்திருக்கும் உணவிலிருந்து உண்ணுங்கள். உங்களுடைய மண்ணறைகளிலிருந்து உயிர்பெற்றெழுதல் அவன்பாலே இருக்கிறது” (76:15)

“பின்னர் ஜும்ஆத் தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டால் பள்ளியிலிருந்து வெளிப்பட்டுப் பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய பேரருளைத் தேடிக் கொள்ளுங்கள். மேலும் நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அதிகமதிகம் அல்லாஹ்வை நினைவு கூருங்கள்” (62:10)

நபி (ஸல்) அவர்களும் உழைப்பின் முக்கியத்துவத்தை பல சந்தர்ப்பங்களில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

“தன்கையால் உழைத்து உண்பதை விட வேறு எந்தச் சிறந்த உணவையும் எவரும் உண்ணுவதில்லை” புகாரி

இதனாலேயே நபிமார்கள் எல்லோரும் தமது வாழ்க்கைத் தேவைக்காக ஏதோ ஒரு தொழிலை செய்பவர்களாக இருந்துள்ளனர். அவர்களில் சிலர் விவசாயம் செய்தனர். இன்று சிலர் கைத்தொழில், வியாபாரம், மந்தை மேய்த்தல் போன்றவற்றில் ஈடுபட்டனர். முஹம்மது நபி (ஸல்) அவர்களும் வியாபாரம், ஆடு மேய்த்தல் போன்றவற்றில் ஈடுபட்டார்கள். ஸஹாபாக்களும் வியாபாரிகளாகவும் விவசாயிகளாகவும் இருந்துள்ளனர். Read the rest of this entry »

 

Tags: , ,

நான் வயதானவன்.

mohamed ali jinnahநான் வயதானவன்.
நான் வயதானவன் என்று என்றும் நினைப்பதில்லை

நான் லயோலா கல்லூரியில் படிக்கும்போது இறுதி ஆண்டு பேராசிரியர் அனைவரையும் ஒரு கேள்வி கேட்டார் .
‘மேற்கொண்டு என்ன செய்வதாக உங்கள் திட்டம். என்ன ‘என்று.
ஒவ்வொருவரும் ஒரு பதில் சொன்னார்கள் .
நான் சொன்னது ‘இந்த ஆண்டு தேர்வில் வெற்றி அடைவதுதான்’ எனது திட்டமென்றேன்

வாழும் வயதான காலத்தில் காட்டில் உள்ள கலாக்காயை விட கையில் உள்ள பலாக்காயை  உபயோகப் படுத்த பழகிக் கொள்ள வேண்டும் .கிடைப்பதை வைத்து பயனடைய பழகிக் கொள்வது சிறப்பு

இறைவா  உன்னை நேசிக்கும் நிலை அதிகமாகிவிட்டது .அதற்கு உன்னை தொழுது வாழ
இன்னும் எனக்கு வயது கொடு என இறைவனை இறைஞ்சுவேன் Read the rest of this entry »

 

Tags: , ,

உதவியும் உபகாரமும்

p13_24522033 உதவியும் உபகாரமும் தனது பெற்றோர், மனைவி, உடன் பிறந்தார் ,சுற்றத்தார் என  சுருங்கிவிடாமல் அனைத்து மக்களுடன் மட்டுமல்லாது இறைவனது படைப்பினங்கள் அனைத்திலும்   உதவியும் உபகாரமும்  விரிவாக்கப் படவேண்டும்.   உதவியும் உபகாரமும் நல்லுறவும் எங்கும் இருந்தால் வாழ்வு மகிழ்வடையும் .உதவியும் உபகாரமும்
பிரதியுபகாரம் அல்லது நன்றியை எதிர்நோக்கி செயல்பட்டதாக இருக்கக் கூடாது.

“நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
‘என்று தருங்கொல்?’ எனவேண்டாம் “- ஔவை.
எதிர்பார்த்தது கிடைக்காமல் போக அத்தகைய எண்ணம் ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் தரக் கூடியதாக அமைந்து விடும். செய்யும்  நற்காரியங்கள் அனைத்தும் இறைவன் அருள் நாடியும் நம் மன திருப்திக்காகவும் இருக்க வேண்டும் .அதனை இறைவன் விரும்புகிறான் அதனால் அது நம் கடமையும் உள்ளடக்கியதாக உள்ளது என்ற நோக்கம் இருக்க வேண்டும்.
. Read the rest of this entry »

 

Tags: , , ,

 
Follow

Get every new post delivered to your Inbox.