தமிழக அரசியலில் அதிரடி அரசியல்வாதிகளைப்போல் காமெடி அரசியல்வாதிகளுக்கும் பஞ்சமில்லை. ஜனதா கட்சித்தலைவர் சுப்ரமணிய சாமிக்கு அடுத்தபடியாக அரசியலில் கிச்சுகிச்சு மூட்டும் இன்னொருவர் விஜய டி.ராஜேந்தர்.
பிரபல கட்சிகளுக்கு முன்னரே கட்சி ஆலோசனைக்கூட்டத்தை ? நடத்தி தேர்தலுக்குத் தயாரானவர் விஜய டி.ராஜேந்தர். சமீபத்தில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் தனது அடுத்த படம் எப்படி இருக்கும், அதன் கதை என்னவென்றெல்லாம் ஆலோசித்தவர்.
இவர் நடத்தும் கட்சியில் இவரைத்தவிர மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எல்லாம் யாரென்றே இதுவரை பலருக்கும் தெரியாமல் மர்மமாகவே உள்ளது. எனினும் இந்தத் தேர்தலில் எந்தக் கட்சியும் கூட்டணிக்கும் அழைக்கவில்லை. ஆறுதலுக்காக ஒரேயொரு சீட்டாவது தருவோம் என்றுகூட சொல்லாததால் தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவுக்குத் தள்ளப்பட்டுள்ளார். Read the rest of this entry »