நெஞ்சுக்கு நீதி
“நெஞ்சில் உங்களுக்கு ஈரம் ஊறுகின்ற காரணத்தினாலேதான் நீங்கள் எவ்வளவு கொடுமையான வியாதிகளையும் எவ்வளவு பார்க்கத்தக்க, முடியாத, இயலாத மோசமான வியாதிகளையும் நீங்கள் குணப்படுத்த ஒரு நோயாளியின் அருகே செல்கிறீர்கள் என்றால், நெஞ்சிலே இருக்கின்ற ஈரமும் அந்த ஈரத்தின் காரணமாக ஏற்படுகின்ற இதயக்கசிவும் தான் இதற்க்கெல்லாம் காரணம்.
இதையெல்லாம் நீங்கள் உணர்ந்து இன்று நேற்றல்ல -காலம் காலமாக மருத்துவத்துறை மாணவர்களுக்கு கற்பிக்கபடுகின்ற பயிற்சி எது என்பதை உணர்ந்து அந்த பயிற்சியையே வாழ்நாளின் குறிக்கோளாகக் கொண்டு மனிதனை வாழவைக்க வேண்டும். அதற்க்காகத்தான் இந்த தொழிலை இன்றைக்கு கற்றிருக்கிறோம் ………”
(தினத்தந்தி01-03-2010)
இது தமிழக முதல்வர் 28 -02 -2010௦ அன்று சென்னை மருத்துவக்கல்லுரியின் 175வது ஆண்டு நிறைவு விழா மற்றும் புதிய மருத்துவக்கல்லுரியின் அடிக்கல் நாட்டு விழாவின் நிகழ்ச்சியில் மாணவர்களை பாராட்டியோதோடு மட்டுமல்லாமல் எப்படி மருத்துவர்களாக வெளியே வரவேண்டும் என்று கூறிய அறிவுரை தான்.
இதனை பிரசுரித்த பத்திரிக்கைகளின் மை காய்வதற்கு முன்னே முதல்வர், இன்னுமொரு கண்டிப்பான செய்தியினை – மக்களின் மனதில் அறுவருப்பினை ஏற்படுத்திய செய்தியினைப் பற்றிய செய்தியினையும் வெளியிட வேண்டிய நிர்பந்தம் ஏற்ப்பட்டது.
“……………………..குற்றங்கள் நடைபெறும்போது அவை எப்படி நடத்தப்பட்டன, எங்கே, யாரால் நடத்தப்பட்டன, எந்த முறையில் நடத்தப்பட்டன என்பதை சான்றாக காட்ட, காட்டப்படும் படங்கள், செய்திகள் அளவுக்கு மீறி விடுகிறது.
அவற்றை படங்களாக பார்த்திடும் இளையோர்கள் நெஞ்ச்களில் எத்தகைய மாறுதல்கள் ஏற்படும் என்பதையும், அது இளைய சமுதாயத்தை எங்கே கொண்டுபோய் நிறுத்தும் என்பதையும் அனைவரும் எண்ணிப்பார்க்கவேண்டும் ……………………..” என்று ,தினமலர் 05-03-2010) ஊடகத்துறையினருக்கு கண்டிப்பு குரல் கொடுத்திருக்கிறார்.
முதல்வர், இளையோர் நெஞ்சங்களையும், அவர்தம் உளப்பாதிப்பைப்பற்றியும் மேலும் நாளை உலகை ஆளப்போகும் இளைய சமுதாயத்தைப் பற்றியும் கவலை கொள்வதைப்போலவே, இன்று எல்லா மருத்துவர்களும், ஆய்வாளர்களும் – தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களின் தரம் பற்றியும் அதனால் ஏற்படும் உளரீதியிலான பிரச்சினைகள் பற்றியும் கட்டுரைகள் வாயிலாகவும், கருத்தரங்குகள் வாயிலாகவும் தங்கள் கருத்துக்களையும் வேதனைகளையும் வெளிப்படுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள் மருத்துவர்கள், முதல்வர் சொன்ன அந்த நெஞ்சின் ஈரம் மற்றும் அதன் இதயக்கசிவின் காரணமாக.
Read the rest of this entry »