சிலருக்குக் கவிதை எழுதுவது பொழுதுபோக்கு. சிலருக்கு பொழுதெல்லாம் அதிலேயே போக்கு. இன்னும் சிலருக்கு அது ஒரு தவம். ஆழ்மன ஆராய்ச்சி செய்யும் காதல் தவம். புகாரியின் கவிதைகளைக் கூட அப்படியென்பேன் நான்.
ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன் அவருடைய கவிதைகள் பரிச்சயமானது எனக்கு. இன்னும் அந்த முதல்க் கவிதையின் குளிர்ச் சாரலிலிருந்து நான் முழுமையாய் வெளியே வரவில்லை. இப்போது அவருடைய சமீபத்தியக் கவிதைத் தொகுப்பு என்னைப் பழைய நினைவுகளுக்குள் இன்னுமொருமுறை சிறை வைத்திருக்கிறது.
கவிதைகள் மீது எனக்கிருப்பதைக் காதல் என்று நான் சொன்னால், அவருக்கிருப்பது உயிர்க்காதல் என்றேனும் சொல்ல வேண்டும்.
சில வேளைகளில் கவிதை நூல்களை வேகமாய் வாசிக்கும் மனநிலை எனக்கும் நேர்வதுண்டு. வேகமாய் வாசிக்க கவிதையொன்றும் தினத்தந்தியல்ல. ஆனாலும் பாதிக் கவிதை வாசித்தபின்னும் பாதிக்காக் கவிதையெனில் அதை வேகமாய்க் கடந்து போகவே மனம் அவசரப்படுத்துகிறது. வேகமாய் வாசிக்க விடாமல் உள்ளிழுத்துக் கொள்ளும் பிளாக்ஹோல் கவிதைகள் கவிஞனை ஒரு தத்துவார்த்தவாதியாக முன்னிறுத்துகின்றன. அந்த தத்துவங்கள் காதலாகிக் கசிந்துருகி வழிகிறது “காதலிக்கிறேன் உன்னை எப்போதும்” நூலில்.
கடல்க் கவிதைப் பயணத்தில், தூரப்பார்வைக்கு உயரம் குறைந்த சின்னப்பாறையாய்த் தோன்றி, உள்ளே டைட்டானிக்கையே உடைத்துச் சிதைக்கும் வீரியம் கொண்ட பனிப்பாறைகள் தான் புகாரியின் கவிதைகள். நமது வாழ்வின் நிகழ்வுகளிலிருந்து அவருடைய கவிதைகள் கிளை முளைப்பிக்கின்றன. அவருடைய வாழ்வின் அனுபவங்களிலிருந்து அவை வேர் பெறுகின்றன. அவருடைய தமிழின் வற்றாத் தடாகத்திலிருந்து அவை நீர்பெறுகின்றன.
இந்த தஞ்சைக் கவிஞனிடம் தஞ்சம் கொண்டிருப்பது சந்த மனசு. ஆனால் இந்தத் தொகுப்பில் சந்தக் கவிதைகளைக் கொஞ்சம் சத்தம் காட்டாமல் அடக்கியே வைத்திருக்கிறார். எனினும் சன்னல் திறக்கையில் சிரித்துக் கடக்கும் சின்னப் புன்னகையாய் ஆங்காங்கே அவருடைய சந்த வீச்சுகள் விழாமலில்லை.
காதலில்லாமல் எப்படி
ஒரு நொடி நகர்த்துவது ?
என்கிறார் புகாரி. அவருடைய இந்த வரிகளைப் புரிந்து கொள்ள அவருடைய காதலுக்கான அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அதை தனது முன்னுரையிலேயே எழுதி வாசகனை கவிதைக்குள் வழியனுப்பி வைத்திருக்கும் உத்தி சிலாகிக்க வைக்கிறது !
காதலிக்கும் ஒவ்வொரு மனிதனும் இவருடைய கவிதைகளின் வரிகளில் விழுந்து விடாமல் இருக்க முடியாது. காதல் கானகத்தின் வரிக்குதிரைகளாய் கவிதை வரிகள் துள்ளித் திரிகின்றன.
வேகமாய் ஓடிக் கிடந்தவன்
நிதானமாய் நடக்கிறான்,
மூர்க்கமாய் முறுக்கித் திரிந்தவன்
கனிந்து குழைகிறான்
என காதலிக்கும் இளைஞனின் மனநிலையைப் பதிவு செய்கிறார். மறுத்துப் பேச யாரும் இருக்கப் போவதில்லை. நிதானமாய் மட்டுமா நடக்கிறான். ஆட்டோக்காரனின் “சாவுகிராக்கியை”க் கேட்டால் கூட சிரித்துக் கொண்டேயல்லவா நடக்கிறான்.
“நேரம் போவதெங்கே தெரிகிறது ?
உயிர் போவதல்லவா தெரிகிறது ! ?
எனைக் கேட்டுப் போனேன்
மரணம் வந்து சேர்ந்தது.
எதைக் கேட்டுப் போனால்
நீ வந்து சேர்வாய் ?
நண்பரின் கவிதைகளிலுள்ள வரிகளில் மனம் தொட்ட வரிகளைப் பட்டியலிட்டால் எல்லா கவிதைகளிலும் வசீகரிக்கும் ஏதேனும் வரிகள் விழுந்து கொண்டேயிருக்கின்றன.
இந்தத் தொகுப்பு காதலை மட்டுமே பாடினாலும், புகாரியின் கவிதை மனசு காதலைத் தாண்டிய பல பரிமாணங்களையும் கண்டது. அவருடைய பஞ்ச பூதக் கவிதைகள் பரவலான கவனத்தையும், கவனித்த அனைவரின் பாராட்டையும் பெற்றக் கவிதைகள்.
புகாரி ஒரு சிற்பி என்று சொல்ல மாட்டேன். சிற்பியின் சிற்பங்கள் குடிசைகளில் புரள்வதில்லை. சிற்பங்கள் ஏழைத் தோழனின் முகமாய் பெரும்பாலும் இருப்பதில்லை. அவரை ஓவியன் என்று சொல்லவும் ஒப்புக் கொள்ள மாட்டேன். இப்போது ஓவியங்களெல்லாம் ஐந்து நட்சத்திர ஓட்டல்களின் பணிப்பெண்கள் போல ஒய்யாரச் சுவர்களுக்கே சொந்தமாய்க் கிடக்கின்றன.
அவரைக் கவிதைக் குயவன் என்பேன்.
குயவன் தனது பாண்டத்துக்காக நேர்த்தியான மண்ணைத் தேடும் கவனம் அவருடைய வார்த்தைத் தேர்வில் இருக்கிறது. விரல்களின் லாவகம் மண்பாண்டத்தை கைகளை விட்டுக் காகிதத்தில் இறக்கி வைக்கின்றன. உடைந்து விடக் கூடாதே எனும் பதை பதைப்புடன் அடுக்கி வைக்கிறார். பானையில் எத்தனை கொள்ளளவு தேவையோ அதை குயவனே முடிவு செய்கிறார். கடைசியில் பாகுபாடில்லாமல் அதைப் பாருக்குப் பந்தி வைக்கிறார்.
புகாரி. தமிழை உயிரின் ஆழம் வரை நேசிப்பவர். மனிதனை தமிழின் ஆன்மாவாய் நேசிப்பவர். அவருடைய இந்தத் தொகுப்பு தோளை விட்டு இறங்க மறுக்கும் சின்னக் குழந்தையாய் என் நெஞ்சம் பற்றிக் கிடக்கிறது.
இன்னும் பல தொகுப்புகளைக் காண அந்த மென் மனசை வாழ்த்துகிறது என் மனசு.
(கவிஞர் சேவியர்)
நன்றி சேவியர் – அன்புடன் புகாரி
சேவியர் விமரிசனம் – காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
அன்புடன் புகாரி
|
| சரணமென்றேன்
Posted: 06 Dec 2010 03:53 AM PST 3. சரணமென்றேன் (2004)
கிடைக்கும் இடங்கள்:
Murugan Book Store
5215 Finch Avenue East
Scarborough, ON M1S 0C2
Canada
001-416-321-0285
மணிமேகலைப் பிரசுரம்
த.பெ. எண்: 1447
7 (ப.எண்: 4), தணிகாசலம் சாலை
தியாகராய நகர், சென்னை – 600 017
தொலைபேசி: 91-44-2434-2926
தொலைநகல்: 91-44-2434-6082
மின்னஞ்சல்: manimekalai@eth.net
வலைத்தளம்: www.manimekalaiprasuram.com
நியூ புக் லாண்ட்
52C வடக்கு உஸ்மான் சாலை
தி. நகர், சென்னை 600 017
(பனகல்பார்க் அருகில்)
தொலைபேசி: 91-44-2815-6006
காவ்யா பப்ளிகேசன்ஸ்
14, முதல் குறுக்குத்தெரு, டிரஸ்ட்புரம்
கோடம்பாக்கம்
சென்னை – 600 024
தொலைபேசி: 91-44-2480-1603
மின்னஞ்சல்: kaavyabooks@yahoo.co.in
வளைத்தளம்: www.kaavyabooks.com
உயிர்மை பதிப்பகம்
11/29, சுப்ரமணியன் தெரு
அபிராமபுரம், சென்னை – 600 018
தொலைபேசி: 91-44-2499-3448
செல்பேசி: 91-98-4027-1561
மின்னஞ்சல்: Sales@Uyirmmai.com
வலைத்தளம்: www.Uyirmmai.com
* மாலன் அணிந்துரை
* முழுவதும் காதல் கவிதைகளைக் கொண்ட தொகுப்பு.
* சென்னையில் பத்திரிகையாளர்கள் மத்தியில் கவிப்பேரரசு வாழ்த்துரை வழங்க, எழுத்தாளர் மாலன் தலைமை தாங்க வெளியிடப்பட்டது.
* தினம் ஒரு கவிதையில் தொடராக வந்தது.
நன்றி
தென்றல்
கனடா கீதவாணி
கனடிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
திண்ணை
கீற்று
நிலாச்சாரல்
தமிழ்மணம்
தினம் ஒரு கவிதை
அன்புடன்
சந்தவசந்தம்
உயிரெழுத்து
இணையவெளி
இணைய அன்பர்கள் நண்பர்கள்
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்
|
| அன்புடன் இதயம்
Posted: 06 Dec 2010 03:45 AM PST 2. அன்புடன் இதயம் (2003)
கிடைக்கும் இடங்கள்:
Murugan Book Store
5215 Finch Avenue East
Scarborough, ON M1S 0C2
Canada
001-416-321-0285
மணிமேகலைப் பிரசுரம்
த.பெ. எண்: 1447
7 (ப.எண்: 4), தணிகாசலம் சாலை
தியாகராய நகர், சென்னை – 600 017
தொலைபேசி: 91-44-2434-2926
தொலைநகல்: 91-44-2434-6082
மின்னஞ்சல்: manimekalai@eth.net
வலைத்தளம்: www.manimekalaiprasuram.com
நியூ புக் லாண்ட்
52C வடக்கு உஸ்மான் சாலை
தி. நகர், சென்னை 600 017
(பனகல்பார்க் அருகில்)
தொலைபேசி: 91-44-2815-6006
காவ்யா பப்ளிகேசன்ஸ்
14, முதல் குறுக்குத்தெரு, டிரஸ்ட்புரம்
கோடம்பாக்கம்
சென்னை – 600 024
தொலைபேசி: 91-44-2480-1603
மின்னஞ்சல்: kaavyabooks@yahoo.co.in
வளைத்தளம்: www.kaavyabooks.com
உயிர்மை பதிப்பகம்
11/29, சுப்ரமணியன் தெரு
அபிராமபுரம், சென்னை – 600 018
தொலைபேசி: 91-44-2499-3448
செல்பேசி: 91-98-4027-1561
மின்னஞ்சல்: Sales@Uyirmmai.com
வலைத்தளம்: www.Uyirmmai.com
* கவிநாயகர் வி. கந்தவனம் வாழ்த்துரை
* இலந்தை சு. இராமசாமி அணிந்துரை
* எழுத்தாளர் மாலன் தலைமையில் தமிழ் உலகம் மின்குழுமம் மூலம் இணைய சரித்திரத்தில் முதன் முதலாக வெளியிடப் பட்ட நூல். தமிழ்மொழி மற்றுமென்றில்லாமல் வேறு எந்த மொழிக்குமே இணையம் வழி நிகழ்ந்த முதல் நூல் வெளியீடு இதுவே.
* சென்னையில் நிகழ்ந்த கற்றுச் சூழல் கவிதைக் கண்காட்சியில் இதன் ‘தண்ணீர்’ கவிதை காட்சிக்கு வைக்கப்பட்டு மிகுந்த வரவேற்பினைப் பெற்றது. கவிஞர் வைகைச்செல்வி தொகுத்த நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே என்ற சுற்றுச்சூழல் கவிதைத் தொகுப்பில் இதன் ‘தண்ணீர்’ கவிதை பங்கேற்றுள்ளது.
* வெளியீடு – பா. ராகவனின் சபரி பதிப்பகம்
நன்றி
தீபம்
சிங்கை தமிழ் முரசு
தென்றல்
கயிறு
கனடா உதயன்
கனடா கீதவாணி
கனடிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
கனடா ஆரம் தொலைக்காட்சி
கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்
பாரதிதாசன் வைய விரி அவை
திண்ணை
கீற்று
பதிவுகள்
நிலாச்சாரல்
தமிழோவியம்
குவியம்
எழில் நிலா
தமிழ்மணம்
தினம் ஒரு கவிதை
அன்புடன்
தமிழ் உலகம்
புத்தகப்புழு
சந்தவசந்தம்
உயிரெழுத்து
இணையவெளி
இணைய அன்பர்கள் நண்பர்கள்
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்
|
| வெளிச்ச அழைப்புகள்
Posted: 06 Dec 2010 03:37 AM PST 1. வெளிச்ச அழைப்புகள் (2002) கிடைக்கும் இடங்கள்: மணிமேகலைப் பிரசுரம் நியூ புக் லாண்ட் காவ்யா பப்ளிகேசன்ஸ் உயிர்மை பதிப்பகம் * கவிப்பேரரசு வைரமுத்து அணிந்துரை * இந்தியத் தமிழரால், வட அமெரிக்காவில் முதன் முதலில் வெளியிடப்பட்ட தமிழ் நூல் * டொராண்டோ கனடாவில் வெளியிடப்பட்டது *கவிதை உறவு ஊர்வசி சோப் நிறுவனம் இணைந்து வழங்கிய துரைசாமி நாடார் இராஜம்மாள் விருது சிறப்புப் பரிசு நன்றி கனடா உதயன் பாரதிதாசன் வைய விரி அவை அன்புடன் இணையவெளி |

அன்புடன் புகாரி* 






