RSS

Monthly Archives: October 2010

3G – தொழில்நுட்பம் – புதுசுரபி

“ஊருக்கு போனவன் சங்கதி சாமிக்குத்தான் தெரியும்” என்றிருந்த காலகட்டத்தில், அதையும் தாண்டி சிந்தித்த கிரகம்பெல். “மிஸ்டர் வாட்சன் இங்கே வாருங்கள், நீங்கள் தேவைப்படுகிறீர்கள்” என்று தொலைவில் உள்ள தம் உதவியாளரை அழைத்தார் கம்பி வழியாக! ஆம் தொலைபேசியை கண்டுபிடித்ததாக அறியப்படும் அலெக்சாண்டர் கிரகாம் பெல் தம் உதவியாளர் வாட்சனுடன் பேசத்துவங்கிய அந்த முதல் வார்த்தையுடன் தொடங்கியது தொலைபேசித்  தொழில்நுட்பம். இன்று உலக மக்கள் தொகையில் 67 % க்கும் மேற்பட்டோரை ஏறத்தாழ 460 கோடி மக்களை இணைத்துக்கொண்டே இருக்கிறது.

ஏறக்குறைய 135 ஆண்டுகளுக்கு முன்னர் கம்பிகள் வழியாக வெறுமனே குரலை மட்டும் அனுப்புவதற்காக உருவாக்கிய தொழில்நுட்பம்தான் இன்று எத்தனை மாற்றங்கள் கண்டுள்ளது!

கம்பிவழி, கம்பியில்லாமல் என்று தொலைத்தொடர்பு, சாட்டிலைட் தொடர்பு என்றும் வெகு தூர அழைப்பு என்பது மிகச் சாதரணமாகி இப்போது உள்ளங்கைக்குள் உலகம் சுருங்கிக் கிடக்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டுள்ளது.

இந்த பரிணாம வளர்ச்சியே இன்று நம் முன்னே பேசப்படும் 3G சேவையாகும். சில ஆண்டுகளுக்கு முன்னரே வெளிநாடுகளில் உபயோகத்திற்கு வந்துவிட்டாலும் நம் நாட்டில் வழக்கம் போலவே கூச்சல்,குழப்பம், அவைஒத்திவைப்பு என நம் சடங்கு சம்பிரதாயங்களையும் தாண்டி சந்தைக்கு வந்திருக்கிறது.

சிவப்புக் கம்பளம் விரிக்கும் அளவுக்கு என்ன இருக்கிறது இந்த தொழில்நுட்பத்தில்???? பார்க்கலாம்.

‘என்னை விட  என் பிள்ளை புத்திசாலி, என பிள்ளையை விட பேரப்பிள்ளை மிக புத்திசாலி’ என்று நாம் நம் தலைமுறைகளைப் போற்றிக்கொள்வது போலவே தொழில்நுட்பமும் தனது தலைமுறையினை பற்றி பெருமிதம் கொள்கிறது. 3G யும் அப்படித்தான். G என்ற ஆங்கிலச்சொல் Generation என்ற வார்த்தையின் முதல்எழுத்தேயாகும். அதாவது தொலைத்தொடர்பு – தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் மூன்றாம் தலைமுறையினை எட்டியுள்ளதை இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. Read the rest of this entry »

 

Tags: , , , ,

அமெரிக்காவில் முஸ்லிம்கள்-ஓர் பயணக்கட்டுரை

அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் 14..7.2010 மாலை சி.என்.என் டி.வி சேனல் செய்தியினைப் பார்த்துக் கொணடிருந்த எனக்கு ஒரு பதினைந்து வயது மதிக்கத்தக்க ஹிஜாப் அணிந்த முஸ்லிம் சிறிமி மிகவும் வீராவேசமாக ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தாள். அது என்ன பேச்சு என்று கேட்க உங்களுக்கு ஆவலாக இருக்கும். 2001 செப்டம்பர் மாதம் 9ந்தேதி அமெரிக்காவின் வர்த்தக நகரமான நியூயார்க்கில் இரட்டைக் கோபுரத்தினை விமானகங்கள் மூலம் மோதி தகர்த்து அதன் மூலம் 2000 பேர்களுக்கு உயிர் சேதமிட்ட இடத்தின் அருகில் ஒரு பள்ளிவாசல் கட்ட அனுமதிக்கலாமா என்ற கருத்தாய்வுக் கூட்டத்தில் தான் அந்த சிறுமி ஆவேசமாக பேசினாள்.
அவளுக்கு முன்பு பேசிய அமெரிக்கர்கள் முஸ்லிம்கள் தீவிரவாத செயலில் ஈடுபட்டவர்கள்,ஆகவே அந்த இடத்தில் மசூதி கட்ட அனுமதிக்கக்கூடாது என்று பேசினார்கள. ஆனால் அவர்களுக்கு பதில் சொல்லும் விதத்தில் இந்த 15 வயது சிறுமி, தன்னுடைய பெற்றோர்களும், உறவினர்களும் கூட அந்த சம்பவத்தில் இறந்து தான் அனாதை முஸ்லிம் சிறிமியாக இருப்பதாகவும் அதற்காக எல்லா முஸ்லிம்களையும் தீவிரவாதிகள் என்று கூறி முஸ்லிம் அமைதியாக வழிபடுவதிற்கு பள்ளிவாசல் கட்ட இடம் மறுப்பது என்ன நியாயம்? என்று கேட்டது,
அந்தப் முஸ்லிம் சிறுமி பேசியதினைக் கேட்டு வாயடைத்த கருத்துக் கேட்க வந்த அமெரிக்க நடுவர்கள் கருத்துக் கேட்டும் நிகழ்ச்சியினை ஒத்தி வைத்து விட்டு சென்று விட்டார்கள்.
அந்த சிறுமி பேசிய பின்பு அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்கள் வழிபாடு தளங்கள,; அவர்களின் வாழ்க்கை முறைகள் பற்றி செய்திகள் சேகரித்து களுக்கு வழங்கலாம் என் ஆசைப்பட்டு இந்தக் கட்டுரை எடுதுகிறேன்:
1) அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்கள் வழிபாடு தளங்கள,; அவர்களின் வாழ்க்கை முறைகள் பற்றி செய்திகள்:
அமெரிக்காவில் இஸ்லாமிய கம்யூனிட்டிகள் 1920ல் தோன்றி வீடுகளில் கூட்டுத் தொழுகை நடத்தி தங்களுடைய சமூக பிரச்சனை பற்றி விவாதிக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் 1950 ஆம் ஆண்டில் தான் ‘நேஷன் ஆப் இஸ்லாம’ என்ற அமைப்பினை அமெரிக்காவில் வாழும் கறுப்பின மக்கள் ஹார்லீன் நகரத்தில் ஆரம்பித்து ஒரு பள்ளிவாசலினை உருவாக்கியுள்ளனர்.
ஆனால் இன்று ஆயிரத்திற்கு மேலான பள்ளிகள் உள்ளன. அமெரிக்காவில் மிக பெரிய பள்ளிவாசல் அடிராய்டு நகரில் உள்ள இஸ்லாமிக் செண்டரில் 1962லிருந்து 1965வரை உருவாக்கப்பட்டுள்ளது. முதலில் அமெரிக்கா- ஆப்ரிக்க முஸ்லிம் மக்களின் உதவியால் உருவாக்கப்பட்ட பள்ளிவாசல்கள் பின்பு எகிப்து, சௌதி அரேபியா, ஈரான் மற்றும் லெபனீஸ் அரசுகளின் பண உதவியால் எழுப்பப்பட்ட பள்ளிவாசல்கள் அனைத்து இன முஸ்லிம் மக்களும் தொழும் பள்ளிகளாக மாற்றப்பட்டன. இஸ்லாமியர் மதசேவைக்காக ‘கவுன்சில் ஆப் மஸ்ஜித்’ அமைக்கப்பட்டு அவர்களின் தேவைகளை நிறைவேற்றப்படுகிறது. 2001 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட சர்வேயின் படி 33 சதவீத தெற்கு ஆசிய மக்களும், 30 சதவீத அமெரிக்க-ஆப்ரிக்க இனத்தவரும், 25 சதவீத அரபிய மக்களும் தொழுகைக்காக பள்ளிக்கு வருகிறார்கள். பள்ளிவாசலில் தொழுகை நடத்துவதிற்காக இன்னமும் இமாம்கள் எகிப்து, துருக்கி, பாலஸ்த்தீனம் ஆகிய நாடுகளிலிருந்து தருவிக்கப்படுகிறார்கள். அத்துடன் ‘இமாம்கள் கவுன்சில்’ 1972 ஆம்; ஆண்டு நிறுவப்பட்டு இமாம்களுக்கான பயிற்சி கொடுத்து அமெரிக்காவில் வசிக்கும் மார்க்க அறிவாளிகளே தொழுகை நடுத்தும் முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிவாசலும் மற்றும் அதனை ஒட்டியுள்ள கம்யூனிட்டி சபை கட்டிடங்களும் மார்க்க மற்றும் பொது கல்விக்காக பயன்படுத்தப்படுகிறது. வாரந்தோறும் சிறுவர் மார்க்கக் கல்வி கற்க ஏற்பாடும், முதியோர் மார்க்க கல்விக்கும், இஸ்லாமியர் அல்லாதவர் இஸ்லாத்தினைப் பற்றி தெரிந்து கொள்வதிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சர்வே படி அமெரிக்கா முஸ்லிம்களில் 10 சதவீதத்திலிருந்து 20 தவீதம் வரை ஐந்து வேளை தொழுகின்றனர். ஆனால் அமெரிக்கா கிறித்துவர்கள் 40சதவீதம் கிறத்துவ சர்ச்சுகளுக்குச் செல்கின்றனர்.
தற்போது கிட்டத்தட்ட 2000 பள்ளிவாசல்கள் உள்ளன. அதனில் 200க்கு மேற்பட்ட பள்ளிவாசல்கள் கலிபோர்னியா, நியுயார்க் மாநிலங்களில் உள்ளன. 100லிருந்து 200 வரை பள்ளிவாசல்கள் டெக்ஸாஸ் புளோரிடா, இல்லினோஸ், ஓகியோ, மிக்சிகான், பென்சில்வேனியா, நியூஜெர்சி போன்ற மாநிலங்களில் உள்ளன, 50திலிருந்து 100வரை பள்ளிவாசல்கள் வாசிங்டன், டென்னசி, அரிசோனா, ஓக்லாமா போன்ற மாநிலங்களில் உள்ளன.
2) அமெரிக்காவில் இஸ்லிமிய சமூதாய ஆரம்பமும் வளர்ச்சியும்:
முதன் முதலில் 16 ஆம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டினவர் அமெரிக்க மண்ணில் காலடி வைக்கும் போது இஸ்லாமியர் வந்தனர் எனக் கூறப்பட்டாலும் 1860ஆம் ஆண்டில் குடியேறிய சிரியா மட்டும் லெபனான் முஸ்லிம் மக்கள் பெருவாரியாக இருந்தனர்.இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்பு ஐரோப்பா, ஆசியா, கிழக்கு ஆப்ரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து முஸ்லிம்கள் குடியேறினர். முதன் முதல் அமெரிக்க முஸ்லிம்கள் ஆப்பிரிக்க நாடுகளைச்சார்ந்த அடிமைகள் தான் என்றால் மினையாகாது. அவர்கள் பெரும்பாலோனோர் படித்தவர்கள்.மார்ட்டின் லூதர் கிங் அமெரிக்கா வெள்ளையினத்தினவரிடமிருந்து கறுப்பின மக்களை விடுதலைக்காகவும் அவர்கள் உரினைமக்காகவும் குரல் கொடுத்தார். ஆனால் அமெரிக்கா-ஆப்பிரிக்கா முஸ்லிம் தலைவர் எலிஜா முகம்மது ‘நேஷன் ஆப் இஸ்லாம் இயக்கத்தினை ஆரம்பித்து வெள்ளை நிற அமெரிக்க மக்களுடன் கறுப்பின மக்களுக்காக சமாதானத்தில் இஸ்லாம் மதத்தினை பரப்ப வழிவகுத்தார். எலிஜா முகம்மது கறுப்பின அமெரிக்கருக்கு தனி கறுப்பின இஸ்லாமிய மாநிலம் கேட்டார். அந்த இயக்கத்தினைச் சார்ந்தவர்கள் பல் வேறு குற்ற பின்னணியில் சிறையில் வாடும் கறுப்பினத்தவரை திருத்தி இஸ்லாத்தினைத் தழுவ தனி அமைப்பான ‘ரிகேபிளிட்டேஷன் ஆப் அமெரிக்கா பிளாக்’ ஏற்படுத்தினர். ஜெயிலில் வாடும் கறுப்பின மக்களை சந்தித்து கீழ்கண்ட உபதேசங்கள் செய்கின்றனர்:
1) கறுப்பராக பிறந்திருப்பது ஒரு வரப்பிரசாதம் அது இழிவல்ல. ஆகவே தாழ்வு மனப்பான்மையினை விட்டொழிக்க வேண்டும்.
2) நீங்கள் எந்த முஸ்லிமையினையும் அழுக்கான உடையிடனோ அல்லது முகச்சவரம் செய்யாத நபரையோ உடல் சுத்தமில்லாத நபரைவேயா பார்க்க முடியாது.
3) எந்த் முஸ்லிமையும் குடிபோதைக்கு ஆளாவதினைப் பார்க்க முடியாது.
4) எந்த முஸ்லிமும் போதை தரும் புகைப்பான்களை உபயோகிப்பதினைக் காண முடியாது.
5) எந்த முஸ்லிமும் அநாகரிக ஆடல்களில் ஈடுபட்டதினை பார்க்க முடியாது.
6) எந்த முஸ்லிமும் தன் மனைவியினைத் தவிர வேற்றுப் பெண்களில் உடல் ரீதியான தொடர்பு கொள்வதினைக் காண முடியாது.
7) எந்த முஸ்லிமும் சிறிய வருமானம் தரும் வேலை செய்யாமல் கூட வாழ பிச்கையெடுப்பதினைக் காணமுடியாது.
8) ஏந்த முஸ்லிமும் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதினைக்காண முடியாது. மேற்கொண்ட போதனைகள் மூலமே பல்லாயிரக்கணக்கான அமெரிக்க-ஆப்ரிக்க இனத்தவர் முஸ்லிம் மதத்திற்கு மாறினர். அதில் ஒருவர்தான் உலகக் குத்துச்சண்டை பதவியிலிருந்து பாலியில் குற்றச்சாட்டில் ஜெயிலில் வாடிய மைச் டைசன் இன்று இஸ்லாத்திற்கு மாறி மாலிக்காக வெளி வந்துள்ளார்.
எலிஜா முகம்மது 1965ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட பின்பு அவருடைய மகனார் வாலாஸ் கறுப்பின முஸ்லிம்களுக்கு தனி மாநில கொள்கையினை கைவிட்டு கறுப்பினர் அல்லாத மக்களையும் நேஷன் ஆப் இஸ்லாம் இயக்கத்தில் சேர்த்துக் கொண்டார்.அந்த அமைப்பிற்கு மேற்கத்திய ‘வேர்ல்டு கமிட்டி ஆப் இஸ்லாம’ என்று பெயர் சூட்டினார். அதன் பின்பு அந்த அமைப்பிற்கு ‘அமெரிக்கன் முஸ்லிம் மிஷன்’ என்று மாற்றப்பட்டது. Read the rest of this entry »
 

Tags: , , , , , , , ,

“சினிமாவுக்கும் ஒழுக்கத்துக்கும் சம்பந்தமில்லை”

திரையுலகுக்கும் ஒழுக்கத்திற்கும் சம்பந்தமேயில்லை என்று பாடலாசிரியர் வாலி குறிப்பிட்டுள்ளார்.

கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்த ஏ.எல்.எஸ்.வீரய்யா “சினிமாவும் நானும்” என்ற பெயரில் புத்தகம் எழுதியிருக்கிறார். இந்தப் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் திரைப்பட பாடலாசிரியர் வாலி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் திரைத்துறையைப் பற்றியும், திரைத்துறையில் இருப்பவர்கள் பற்றியும்  வெளிப்படையான சில கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
வியர்வை சிந்தி உழைப்பவன்தான் சினிமாவில் வளர முடியும். காக்காய் பிடிப்பவன் வளர முடியாது. அதே நேரம், நான் பார்த்த, என் அனுபவத்தில் சொல்கிறேன், ஒழுக்கத்துக்குச் சம்பந்தமே இல்லாத துறை சினிமா. இதில் ஒழுக்கமாக இருப்பவர்கள் எஸ்.பி.முத்துராமன் போன்ற வெகுசிலர்தான். இன்னொன்று, சினிமாவில் வெற்றியை மண்டைக்குள் கொண்டு போகக் கூடாது. தோல்வியை மனசுக்குள் கொண்டு போகக் கூடாது. எவ்வளவு வளர்ச்சி வந்தாலும் மனிதன் மனிதனாகத்தான் இருக்க வேண்டும். Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on October 29, 2010 in Uncategorized

 

Tags: , , , , ,

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் மாறனின் பங்கு 31%ஆக உயர்வு!

குறைந்த செலவு விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தில் சன் தொலைக்காட்சி குழுமங்களின் நிறுவனர் கலாநிதி மாறனின் பங்கு 31 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் 19.37 மில்லியன் பங்குகளை அதாவது அந்நிறுவனத்தின் 4.78 சதவீத பங்குகளை கலாநிதி மாறன் வாங்கியுள்ளதாக மும்பை பங்குச் சந்தை நிறுவனத்தில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் புதன் கிழமையன்று தகவல் தந்தது.

அக்டோபர் 26ஆம் தேதியன்று இந்த பங்கு வர்த்தகம் பங்குச் சந்தைக்கு வெளியில் நடைபெற்றுள்ளது. இதன் மூலம் கலாநிதி மாறனின் பங்கு 30.98 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த அமெரிக்க நிறுவனங்களான வில்பர் ராஸ் மற்றும் ராயல் ஹோல்டிங் சர்வீசஸ் ஆகியவற்றின் பங்குகளை கலாநிதி மாறனும் அவரது KAL ஏர்வேஸ் என்ற நிறுவனமும் வாங்குவதற்கான ஒப்பந்தம் கடந்த ஜூன் மாதம் கையெழுத்தானது குறிப்பிடத் தக்கது.

Source:http://www.inneram.com/2010102711491/kalanithi-maran-raises-stake-in-spicejet-to-31-pc

 

நாம் பிடித்த புலிவால்

அல்லாஹ்வின் திருப்பெயரால்…
பிறக்க ஓர் இடம்!
பிழைக்க ஓர் இடம்!
இதுதான் என் சமுதாய
மக்களின் வாழ்வாகிவிட்டது!
நம் முன்னோர்களுக்கோ
பர்மா, ரங்கூன், மலேசியா!
எங்களுக்கோ வளைகுடா!
இனி ஓர் நாடு கண்டுபிடித்தால்
அங்கும் தொடருமா?
எங்கள் வாரிசுகள்?
வளைகுடா வசந்தம் என்றார்கள்!
முன்னால் கால் வைத்த
மூத்த குடி(அடிமை)மகன்கள் நாம்!
வைத்த காலை எடுக்க முடியவில்லை
ஸ்டெப் கட்டிங் தலையுடன் வந்த
எமக்கு இன்றோ நரையும், வழுக்கையும்!
சில்வர் ஜூப்ளி முடிந்து விட்டது
எம்முடைய பயணமோ
திக்குத்தெரியாமல்
வளைகுடாவை நோக்கியே!
ஊர் சென்றால் நம்
சுமைகளை சுமந்து செல்வதில்
அலாதி ஆனந்தம் நம்
கையெல்லாம் சிவக்க சுமப்போம்
அடுத்த தடவை சுதந்திரபறவைதான்
ஒரே சுமைதான்! நம் வைராக்கியம்
காற்றோடு போகும்! மீண்டும் சுமை!
 

புனித கஃபா தொடர்பான அடையாளச் சின்னங்கள்

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி M.J.M.ரிஸ்வான் மதனி

அஷ்ஷைக்: எம்.எம். எம். ரிஸ்வான் மதனி

புனித கஃபா ஆலயம் பற்றியும், அதனோடு தொடர்பான அடையாளச் சின்னங்கள் பற்றியும் இங்கு நோக்கவிருக்கின்றோம்.

கஃபாவின் அமைவிடம்: சவூதி மக்கா நகரில் அமைந்திருக்கின்ற புனித கஃபா ஆலயம் பூமியின் மையப்பகுதியில் அமைந்திருக்கின்றது. இதை எகிப்து நாட்டைச் சேர்ந்த புவியியல் ஆய்வாளர் ஒருவரும் உறுதி செய்துள்ளார். இது பற்றி அறிஞர் ஜாகிர் நாயக் என்பவரும் தனது உரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

கஃபாவின் மறுபெயர்கள்:
இது மனிதர்கள் அல்லாஹ்வைத் தூயமையாக வணங்கி, வழிபட பூமியில் நிறுவப்பட்ட முதலாவது ஆலயமாகும். இதன் சிறப்பைப் பிரதிபலிப்பதற்காக அது பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது.

- அல்லாஹ்வின் வீடு, (நபிமொழிகள்),

- அல்பைத்துல் அதீக், (அல்ஹஜ்:29, 33), பழமையான வீடு, புராதன வீடு.

- அல்பைத், (அல்பகரா: 125, 127, 158), (ஆலுஇம்ரான்:97), (அல்அன்ஃபால்:35, அல்ஹஜ்:26), (குரைஷ்:3). குறிப்பாக அந்த இல்லம்.

- அல்பைத்துல் ஹராம் (அல்மாயிதா, 97) சங்கையான இல்லம்.

- அல்மஸ்ஜிதுல் ஹராம், (அல்பகரா: 144,149,150, 196), அல்மாயிதா:2, அல்அன்ஃபால்: 34, அத்தௌபா:7, 19,28), (அல்இஸ்ரா:1, 7), அல்ஹஜ்: 25, அல்ஃபத்ஹ்:25, 27).

- அல்கஃபா,(அல்மாயிதா: 95, 97). நாட்சதுரமானது

- குறிப்பு: கஃபதுல்லாஹ் என்ற சொல் நாம் பாவித்தாலும் அதை எந்த கலைக்களஞ்சியத்திலும் காணமுடியவில்லை.

கஃபா என்பதன் பொருள்:
சதுரவடிவிலான பெட்டி, கட்டம் போன்ற பொருள் உண்டு. கஃபா சதுரவடிவம் கொண்ட அமைப்பில் இருப்பதாலும் இந்தப் பெயர் வந்திருக்கின்றது.

கஃபாவைக் கட்டியவர்:
நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் கட்டினார்கள். கட்டுமாணிப்பணிக்கு துணையாக அவர்களின் மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களையும் எடுத்துக் கொண்டார்கள். அன்னை ஹாஜர் (ரழி) அவர்கள் தனது மகனோடு தன்னந்தனியே கஃபா பள்ளத்தாக்கில் வசித்து வந்த போது வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் தனது இறக்கையினால் நிலத்தில் அடித்தார்கள். உடனே ஜம்ஜம் நீரூற்று உருவானது. அந்த நேரத்தில் ஹாஜர் அம்மாவிடம்: ‘இதோ இந்த இடத்தில் அல்லாஹ்வின் வீடு உள்ளது. அதை இந்தச் சிறுவனும், அவனது தந்தையுமாக கட்டுவார்கள்’ என்று ஜிப்ரீல்(அலை) அவர்கள் கூறியதாக புகாரியில் இடம் பெறும் செய்தியைப் பார்க்கின்றோம்.

அந்த முன்னறிவிப்பு இஸ்மாயீல் (அலை) அவர்கள் இளம்பருவத்தை அடைந்த போது நடந்தேறியது. அவர்களை அவர்களின் தந்தை இப்ராஹீம் (அலை) அவர்கள் சந்தித்து ‘ மகனே அல்லாஹ் எனக்கு ஒரு கட்டளை பிறப்பித்துள்ளான், அதற்கு நீ துணை நிற்பாயா? எனக் கேட்டார்கள், அதற்கு அவர்கள் ஆம். (நிச்சயமாக) என்றார். உடனே அவர்கள், குறித்த அந்த இடத்தை சுட்டிக்காட்டி, அல்லாஹ் இந்த இடத்தில் அவனது வீட்டை அமைக்கும்படி கட்டளையிட்டுள்ளான் என்று கூறினார்கள். வெள்ளப் பெருக்கு காரணமாக அதன் வலது, மற்றும் இடது பக்கங்கள் தேய்ந்து, தூர்ந்து குட்டிச்சுவர் போல் அது காட்சி தந்தது. அந்த இடத்தில்தான் அல்லாஹ்வின் ஆலயத்தை இப்ராஹீம் (அலை) அவர்கள் தனது மகனி உதவியுடன் கட்டி முடித்துப் பிரார்த்தனையும் செய்தார்கள். (புகாரி).

இந்த இடத்தில்தான் அல்லாஹ்வின் வீடு உள்ளது என்று வானவர் கூறியதையும், பின்னர் இப்ராஹீம் (அலை) அவர்கள் தனது மகனிடம் கூறியதையும் பார்த்தால் அந்த இடத்தில் அல்லாஹ்வின் ஆலயம் அடையாளப்படுத்தப்பட்டு இருந்திருக்கின்றது என்பதை அறியலாம். ஆனால் அது வணங்கப்பட்டதற்கான எந்த ஆதாரம் நாம் தேடிப்பார்த்தவரை கிடைக்கவில்லை, அதைக்கட்டி முடித்த பின்பே வணக்கவழிபாடுகள் தொடங்கின என்பதை குர்ஆன் வசனங்கள் மூலமும், நபிமொழிகள் மூலம் அறியலாம். (அல்லாஹ்வே மிக அறிந்தவன்).

Read the rest of this entry »

 

மனைவியை பிரிந்து வெளிநாடுகளில் வேலை செய்யலாமா

 

 

 

 

 

மனைவியை பிரிந்து வெளிநாடுகளில் வேலை செய்யலாமா மனைவியை பிரிந்து வெளிநாடுகளில் வேலை செய்யலாமா · இந்தியாவில்

 
Leave a comment

Posted by on October 24, 2010 in video

 

C N N Hero of the year விருதை தமிழர் வெல்வாரா?

பாபு
நீங்கள் பாடுபட்டுத் தேடும் செல்வம் பிற்காலத்தில் உதவுமாறு சேமித்துவைக்க என்னென்ன வழிகள் (அ) முதலீடுகள்  இருக்கின்றன? ஒரு கணம் யோசித்துப் பாருங்கள்.  ஒருகாலத்தில் உதவும் என்று நினைக்கிற பல வழிகளும், முதலீடுகளும் தேவைப்படும் காலத்தில் பல்லிளித்து நிற்கையில்,  நாம் செய்த தான தருமங்கள்  தக்க தருணத்தில் நம் தலைகாத்து நிற்பதை அறிந்திருக்கிறோம்;கேட்டிருக்கிறோம்

தானத்திற் சிறந்தது அன்னதானம் என்பார்கள்.
உணவு கொள்வதில் மட்டும்தான் ஒரு மனிதன் “போதும்” என்றுசொல்வதும் நிறைவு பெறுவதும் முடியும்.

வள்ளுவப் பெருந்தகை என்ன சொல்கிறார் தெரியுமா?

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி

ஒன்றுமே இல்லாதவரின் பசியைத் தீர்ப்பது இருக்கிறதே, அதுதான் பொருளைப் பெற்றவனின் சேமிப்புக்கிடங்காகும்.

இதையெல்லாம் தெரிந்தோ என்னவோ, மதுரைத்தமிழர் 29 வயதான நாராயணன் கிருஷ்ணன் என்கிற மனிதாபிமான இளைஞர் அந்த மகத்தான நற்பணியை ஆற்றிவருகிறார். Read the rest of this entry »

 

நாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்!

உலகில் வாழும் மனிதர்கள் யாவரும் தவறிழைக்கக்கூடியவர்களே! அந்தத் தவறிலிருந்து மனிதர்களைத் திருத்தவேண்டுமென்ற நோக்கில், பல்வேறு சட்டங்கள் மனிதனால் இயற்றப்பட்டாலும் தவறுகள் குறைந்தபாடில்லை. நாகரீகம் வளர வளர தவறும் பல்வேறு பரிமாணங்களில் மனிதனை ஆட்டிப்படைக்கிறது. இத்தகைய தீமையிலிருந்து இரண்டு விஷயங்களால் மட்டுமே மனிதனை தீமைகளிலிருந்து மீட்டெடுக்க முடியும்.
1. இறை அச்சம்
2. வெட்கம் [நாணம்]

இறைவனுக்கு அஞ்சக்கூடிய ஒருவன், மக்கள் மத்தியில் இருந்தபோதும் தனிமையில் இருக்கும்போதும் தவறு செய்ய அஞ்சுவான். ஏனெனில், மனிதர்கள் நம்மைப் பார்க்காவிட்டாலும் அகிலமனைத்தையும் கண்காணித்துக்கொண்டு இருக்கும் இறைவன் நாம் செய்யும் தவறை கண்கானித்துக்கொண்டிருக்கிறான். நாளை நியாயத்தீர்ப்பு நாளில் நம்தந்தை ஆதம்[அலை] அவர்கள் முதல், உலகம் அழியும் காலத்தில் இறுதியாக பிறந்த மனிதன்வரை அனைவரையும் ஒன்றுதிரட்டும் அந்த மஹ்ஸர் மைதானத்தில், நம்முடைய தீமைகளை வெளிச்சம்போட்டு காட்டுவான் என்ற அச்சம் இருந்தால் ஒரு மனிதன் தவறு செய்வதிலிருந்து தன்னை தற்காத்துக்கொள்வான்.

இறை அச்சம் பலவீனமாக இருக்கும் ஒருவனிடத்தில் வெட்கஉணர்வு இருந்தால், அவனும் தவறு செய்ய யோசிப்பான். ஏனெனில், நாம் தவறு செய்யும் போது யாராவது பார்த்துவிட்டால் மானம் போகுமே என்ற அவனுடைய வெட்கம் அவனை அந்தத் தவறிலிருந்து தற்காத்து காப்பாற்றும்.

இந்த இரண்டுமே பலவீனமாக உள்ள மனிதர்கள் தவறு செய்ய யோசிக்கமாட்டார்கள். அதுக்கு உதாரணமாக இன்றைய அரசியல்வாதிகளைச் சொல்லலாம். மக்களின் பொதுப்பணத்தை சுருட்டுகிறார்கள்; அதற்காக கைது செய்யப்படும்போது கொஞ்சம் கூட வெட்கமின்றி, தியாகிபோல கையசைத்துக்கொண்டு போலிஸ் ஜீப்பில் ஏறுகிறார்கள். அதுபோல நேற்றுவரை ஒரு தலைவரை தாறுமாறாக விமர்சித்துவிட்டு மறுநாளே, அந்த தலைவருக்குப் பொன்னாடை போர்த்தி புகழ்மாலை சூட்டுகிறார்கள். நம்முடைய இந்தச் செயலைப் பார்த்து மக்கள் எள்ளிநகையாடுவார்களே என்ற வெட்கம் இவர்களுக்கு இருப்பதில்லை.
இதில் வேதனை என்னவெனில், முஸ்லீம் அமைப்புகளும் ஒவ்வொரு தேர்தலிலும் எந்த அணியில் அங்கம் வகிக்கிறார்களோ அந்த அணியில் தலைவருக்கு ஆதரவாக, எதிரணி தலைவரைச் சாடுவதும் பின்பு இந்த அணிக்கு வந்தவுடன் அந்த அணியைச் சாடுவதுமாக சராசரி அரசியல்வாதிகளாக வலம்வருவதற்கு காரணம் வெட்கமின்மைதான். இப்படிப் பட்டவர்களை பற்றித்தான் நபி[ஸல்]அவர்கள் கூறினார்கள்;
“மக்கள் முந்தைய இறைத்தூதர்களின் (முது)மொழிகளிலிருந்து அடைந்து கொண்ட ஒன்றுதான், ‘உனக்கு நாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்’ என்பது” என அபூ மஸ்ஊத் உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார். (நூல்; புஹாரி, 6120)

வெட்கம் ஈமானின் ஒரு பகுதியாகும்

ஈமான் [இறை நம்பிக்கை] என்றால் நாம் என்ன விளங்கியிருக்கிறோம் என்றால், ஆறு அடிப்படையான விசயங்களை நம்பினால் போதும். அதாவது, அல்லாஹ்வை, மலக்குகளை, வேதங்களை, நபிமார்களை, மறுமையை,விதியை நம்பினால் போதும் நாம் பரிபூரண முஸ்லீம் என்று. ஆனால் இந்த ஆறு விஷயங்களும் மரத்தின் ஆணிவேர் போன்றது, முழுமையான ஈமான் என்பது அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டதாகும். நபி[ஸல்]அவர்கள் கூறினார்கள்:

“ஈமான் எனும் இறைநம்பிக்கை அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்”. (நூல்: புஹாரி, எண் 9.)

ஒரு மரம் வெறுமனே அதன் அடிப்பகுதியோடு நின்றால் அதைப் பசுமையான மரம் என்று சொல்லமாட்டோம். ஆனால் பல்வேறு கிளைகளுடனும் இலைகளுடனும் காட்சிதரும் மரத்தைத்தான் பசுமையான மரம் என்போம். அதுபோல் வெட்கம் என்ற கிளையும் நம்முடைய ஈமான் என்ற மரத்தில் இருக்கவேண்டும். அப்போதுதான் முழுமையான ஈமானாகும்.
ஆதிமனிதரும் நபியும் நம்தந்தையுமான ஆதம் மற்றும் ஹவ்வா[அலை]ஆகியோரின் வெட்கம்
فَدَلاَّهُمَا بِغُرُورٍ فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْءَاتُهُمَا وَطَفِقَا يَخْصِفَانِ عَلَيْهِمَا مِن وَرَقِ الْجَنَّةِ وَنَادَاهُمَا رَبُّهُمَا أَلَمْ أَنْهَكُمَا عَن تِلْكُمَا الشَّجَرَةِ وَأَقُل لَّكُمَا إِنَّ الشَّيْطَآنَ لَكُمَا عَدُوٌّ مُّبِينٌ
இவ்வாறு, அவன் அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள் (தங்கள் நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான் – அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது – அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று. அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்; (அப்போது) அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு, “உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா?” என்று கேட்டான்.[7:22]

ஷைத்தானின் சூழ்ச்சிக்குப் பலியான ஆதம்[அலை], ஹவ்வா[அலை] இருவரும் இறைவன் தடுத்த மரத்தின் கனியைப் புசித்தபோது, அவ்விருவரின் வெட்கத்தலங்கள் வெளிப்பட்டவுடன் இருவரும் தம்பதியர் என்றபோதிலும் அவர்கள் தங்களுக்குள் மறைத்துக்கொள்ளவேண்டியதில்லை என்ற போதிலும் வெட்க உணர்வு அவர்களுக்கு இருந்ததால் இலைகளை வைத்து மறைக்க முற்பட்டனர் என்றால், இன்று நம்சமுதாய பெண்களில் சிலர் கணவர் மட்டும் காணவேண்டிய அழகை கடைவிரிப்பது போன்று, பர்தா அணியாமல் கண்ணாடிபோன்ற சேலைகளை அணிந்து கொண்டு வலம்வருவதும் அதை தடுக்கவேண்டிய பொறுப்பிலுள்ள கணவனோ, அல்லது பெற்றோரோ ‘நாகரீகம்’ என்று கண்டுகொள்ளாமல் விடுவதும் வெட்கமின்மைதானே!

சினிமாவில் அரைகுறை ஆடைகளுடன் வலம்வரும் நடிகைகளை ரசிப்பதும் அத்தகைய ஆபாச காட்சிகளை மனைவி,மக்கள் சகிதமாக கண்டுகளிப்பதும் வெட்கமின்மைதானே!
இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது. இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும்,

(முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது. மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.[24:31]

இந்த வசனத்தின் அடிப்படையில் தங்களை மறைத்துக்கொள்ளவேண்டிய முஸ்லீம் பெண்களில் சிலர், இறை கட்டளையை புறக்கணித்து, மச்சான் என்றும் கொழுந்தன் என்றும் குடும்ப நபர் என்றும் நெருங்கிய உறவினர் என்றும் சகஜமாக இவர்கள் முன்னால் சாதாரணமாக வலம்வருவதும் கேலிசெய்து விளையாடுவதும் வெட்கமின்மைதானே!

ரசூல்[ஸல்] அவர்கள், அந்நிய பெண்கள் இருக்கும் இடத்திற்குச் செல்லும் விஷயத்தில் உங்களை எச்சரிக்கிறேன் என்று கூறியவுடன் சகாபாக்களில் ஒருவர், ‘அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய சகோதரன் வரலாமா?’ என வினவ ‘நீங்கள் மரணத்தை விரும்புவீர்களா?’ என்று கேட்டார்கள் என்ற செய்தியை நாம் ஹதீஸில் பார்க்கிறோம் என்றால், அல்லாஹ்வின் தூதரின் இந்தக் கட்டளை நடைமுறையில் இல்லாததால் பல்வேறு குடும்பங்களில் சிக்கல்கள் ஏற்பட்டதையும் பார்க்கிறோம். இனியேனும் உறவுகள் விஷயத்தில் ஆணாயினும் பெண்ணாயினும் கவனம் செலுத்தி தங்களைப் பேணிக்கொள்வது சிறந்தது.

ரசூல்[ஸல்] அவர்களின் வெட்கம்

அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்:

“நபி(ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணை விடவும் அதிக வெட்கமுடையவர்களாயிருந்தனர்.” ஷுஅபா(ரஹ்) இதே போன்றதை அறிவித்துவிட்டு, “நபி(ஸல்) அவர்கள் எதையாவது வெறுத்தால், அது அவர்களின் முகத்தில் தெரிந்துவிடும்” என்று (அதிகப்படியாக) அறிவித்தார்கள். (நூல்:புஹாரி,எண் 3562)

சகாபாக்களின் வெட்கம்

“அன்சாரிகளைச் சேர்ந்த ஒருவர் தம் சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே, ‘அவரை(க் கண்டிக்காதீர்கள்;)விட்டு விடுங்கள். ஏனெனில், நிச்சயமாக வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஓரம்சமாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (நூல்: புஹாரி,எண் 24.)
ரசூல்[ஸல்] அவர்களிடத்திலும், சகாபாக்களிடத்திலும் இறையச்சமும் இருந்தது அதோடு வெட்கமும் இருந்தது. அதனால்தான் அவர்களால் வாய்மையிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கமுடிந்தது.

மார்க்கத்தை அறிய வெட்கப்பட கூடாது

“உம்முஸுலைம்(ரலி) என்ற பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நிச்சயமாக அல்லாஹ் சத்தியத்தை எடுத்துச் சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்கு ஸ்கலிதமானால் அவளின் மீது குளிப்பு கடமையாகுமா?’ என்று கேட்டதற்கு ‘ஆம்! அவள் நீரைக் கண்டால்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதைக் கேட்டுக் கொண்டிருந்த) உம்மு ஸலமா(ரலி) தம் முகத்தை (வெட்கத்தால்) மூடிக் கொண்டு, ‘பெண்களுக்கும் ஸ்கலிதம் ஏற்படுமா?’ என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நன்றாய் கேட்டாய்! ஆம்! அப்படி இல்லையென்றால் அவளுடைய குழந்தை எதனால் அவளைப் போன்றும் இருக்கிறது?’ என்று கேட்டார்கள்” என ஸைனப் பின்து உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார். (நூல்: புஹாரி,எண் 130.)
நம்முடைய சமுதாயத்தில் பெரும்பாலான ஆண்களும் பெண்களும் வெட்கப்படவேண்டிய விஷயத்தில் வெட்கப்படமாட்டார்கள். ஆனால், மார்க்கவிஷயத்தில் ஆலிம்ஸாவிடம் ஒரு கேள்வி கேட்கவேண்டுமேனில் வெட்கப்படுவார்கள். மிகப்பெரிய ஆலிம்ஸாவான ரசூல்[ஸல்]அவர்களிடம் ஒரு பெண்மணி ‘பெண்மை’ சம்மந்தமான கேள்வியைக் கேட்டுள்ளார்கள் எனில், நம்மில் சிலர் குர்’ஆன் ஓததெரியாதவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் குர்’ஆனை கற்றுக்கொள்ளவேண்டியது தானே என்றால், இந்த வயசுல போயி குர்’ஆனை கத்துதாங்கன்னு யார்ட்டயாவது சொல்ல வெக்கமாயிருக்கு என்பார்கள். ஆனால் இந்த வயசிலும் கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ள வெட்கப்படமாட்டார்கள்.

எனவே மார்க்கத்தை கற்பது நீங்கலாக,மற்ற அனைத்திற்கும் வெட்கப்படவேண்டும். அந்த வெட்க உணர்வும் இறையச்சமும்தான் நம்மை பக்குவப்படுத்தும் என்பதுதான் நிதர்சன உண்மையாகும்.

by Nagore Flash -ABDULLAH

நன்றி :  http://nagoreflash.blogspot.com/2009/10/blog-post_02.html

 
Leave a comment

Posted by on October 21, 2010 in Uncategorized

 

ஆறு ஆண்டுகளாக தேடப் பட்டு வந்த முன்னாள் திமுக எம்.எல்.ஏ கைது!

தமிழக அரசின் பொதுப் பணித் துறையில் என்ஜினீயராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் வெங்கட் ராமன். இவர் தனது குடும்பத்தினருடன் சென்னை மேற்கு மாம்பலத்தில் வசித்து வந்தார். நேற்று வெங்கட் ராமனின் வீட்டுக்கு 2 பேர் வந்து தங்களை வருமான வரித் துறை அதிகாரிகள் என்று அறிமுகம் செய்து கொண்டு அடையாள அட்டையை காட்டி உங்கள் வீட்டை சோதனை செய்ய வேண்டும் என்று கூறி சோதனை செய்துள்ளனர்.

சோதனை செய்த பின் 25 சவரன் தங்க நகை மற்றும் 20000 ரூபாய் ரொக்கப் பணத்தையும் எடுத்துக் கொண்டு இதற்க்கு முறையான கணக்கு காட்டி விட்டு வருமான வரி அலுவலகத்தில் வந்து பெற்று கொள்ளுங்கள் என்று கூறி விட்டு பைக்கில் ஏறி கிளம்பியுள்ளனர். அவர்களின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட வெங்கட் ராமனின் மருமகள் ராதா பைக்கை எடுத்து கிளம்பத் தயாரான நிலையில் பின்னால் இருந்தவரின் சட்டையை பிடித்து இழுத்து திருடன் என சத்தம் போட அங்கு வந்தவர்கள் அவனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

பின்னர் நடைபெற்ற விசாரணையில் அவர் விளாத்தி குளம் முன்னாள் திமுக எம்.எல்.ஏ ரவி சங்கர் என்று தெரிய வந்தது. இவர் மீது இலங்கைக்கு போதைப் பொருள் கடத்திய வழக்கும், விளாத்திகுளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மோசடி செய்த வழக்கும் நிலுவையில் உள்ளது. ஒரு வழக்கில் நெல்லை கோர்ட்டில் ஆஜர் படுத்துவதற்காக ரவி  சங்கரை கடந்த 2004 ம் ஆண்டு நெல்லைக்கு கொண்டு வந்த நிலையில் உறவினர் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று கூறி வீட்டின் பின் புறமாக தப்பி சென்றவர் தற்போது வசமாக சிக்கியுள்ளார்.

1996 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விளாத்தி குளம் தொகுதியில் போட்டியிட்ட வைகோவை எதிர்த்து 634 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் ரவி சங்கர் என்பது குறிப்பிடத் தக்கது.

Source : http://www.inneram.com/2010102011313/ex-dmk-mla-ravisankar-arrested

 
 
Follow

Get every new post delivered to your Inbox.